செவிலியர் தின வாழ்த்துக்கள் (2013)

அனைத்து செவிலியர்களுக்கும் உலக் செவிலியர் தின நல்வாழ்த்துக்கள்

2013 ஆம் வருடத்தில் செவிலியர் தினத்தை கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்,

இந்நேரத்தில் செவிலியர்கள் ஒன்றுபட்டு அவர்களின் உரிமைகளை மீட்டு எடுக்க முற்பட்டோமா என்றால்?

இல்லை எனலாம்,

இந்திய செவிலிய குழுமம் பல்வேறு செயல்களை செய்து செவிலிய துறையின் மாண்பினை மீட்டு வருகிறது

ஆனால் அதிகாரம் கொண்ட அமைப்பாக அது இருக்கிறதா என்றால்?

இல்லை?

இந்தியா முழுவதும்  செவிலியர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது,
குறைந்த ஊதியம் அதிகபட்ச வேலை என செவிலியர்கள் கொத்தடிமைகளாக மட்டுமே பாவிக்கப்படுகிறார்கள் என்றால் அது மிகையாகாது.

தமிழக செவிலிய துறையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக செவிலியர்கள்  தர்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வருகின்றனர்.

இது அரசு மற்றும் அரசு சார்ந்த இயக்ககமும் செவிலியர்களிடையே ஒரு பொறுப்பு அற்ற நிலையை உருவாக்கி அவர்களின் உரிமைகளை மறுக்க அல்லது மறைக்கப் எடுத்த முடிவாகும்.

இன்றைய சூழ்நிலையில் செவிலியர்களின் சமூக அந்தஸ்து என்பது மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது. இதனை மாற்ற வெளியில் இருந்து ஏதாவது சக்தி வரும் என எதிர்பார்ப்பது தவறு.

 “தனி இயக்ககம் வேண்டும்!”

தமிழக செவிலியர்களின் உரிமைகளை மீட்டு எடுக்க அனைவரும் ஒன்று பட்டு, செவிலியர்களால் நியமிக்கப்படும் ஒரு இயக்ககம் பெற வேண்டும், இப்போது இருக்கும் செவிலிய துறை தொடர்பான இயக்கக அதிகாரிகள் செவிலியர் நலன் விரும்பிகளாக இல்லை என்பது நிதர்சனஉண்மை.


செவிலியர்கள் நாம் ஒன்றுபட்டு, நமது உரிமைகளை மீட்க வேண்டும், உலகத்து செவியரிடையே  ஒற்றுமை ஓங்க வேண்டும்

நன்றி


இப்படிக்கு
உமாபதி 

Post a Comment

Previous Post Next Post