CNL என்றால் என்ன..?
CIVIL NURSING LIST
அப்படின்னா?
அரசுப்பணியில் காலமுறை ஊதியத்தில்(வழக்கு சொல்லாக வேண்டுமானால் நிரந்தர செவிலியர்) பணியில் சேர்ந்த அன்றில் இருந்து உங்கள் அனுபவம் தொடங்குகிறது
உதாரணமாக ஒரு 100 பேர் பணியில் சேர்கிறீர்கள் என்றால் ஒன்றிலிருந்து 100 வரை வரிசைப்படுத்த வேண்டுமல்லவா? அப்படித்தான் சீனியாரிட்டி தொடங்குகிறது.
அந்த ஒன்றிலிருந்து 100 வரை வரிசைப்படுத்திய பட்டியல் தான் CNL.
CNL போல வேறு என்ன உள்ளது
MNL Military Nursing List
அதுசரி இந்த CNL சீனியாரிட்டி எதற்கு பயன்படும்?
ஒரு செவிலியர் 5 வருடங்கள் தொடர்ந்து காலமுறை ஊதியத்தில் பணி புரிந்து இருந்தால் அவர் செவிலிய கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற தகுதி உடையவர் ஆகிறார்.
இது அரசு விதி, அதுபோன்ற பதவி உயர்வுக்கு இந்த CNL பயன்படும்.
இப்போது செவிலியர்களுக்கு பதவி உயர்வு பெற என்ன நடைமுறை?
சீனியாரிடி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
சீனியாரிட்டியை நிர்ணயிப்பது எது?
அது தான் CNL CIVIL NURSING LIST
அப்போ எல்லோருக்கும் CNL நம்பர் இருக்கா?
இல்லை, 2005 வரை பணியில் இணைந்தவர்களுக்கு தான் இருக்கிறது.
அதன் பின்னர் 20 வருடமாக நிர்ணியிக்கப்படவில்லை.
CNL யார் நிர்ணயிப்பார்கள்?
செவிலியர்களுக்கு பணி ஆணை வழங்கிய மாநில மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் அவர்கள் தான் வருடா வருடம் நிர்ணயித்து பராமரித்து வருவார்கள்.
எனக்கு CNL எண் வர என்ன செய்ய வேண்டும்?
தற்போது கொடுக்கப்பட்ட படிவத்தை நிரப்பி உங்கள் செவிலிய கணகாணிப்பாளர் / மருத்துவ அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.
அப்ப சீக்கிரமா மேட்ரன் ஆயிடலாமா?
உங்கள் சீனியாரிட்டி நிர்ணயம் செய்ய உடனே செயல் படுங்கள் பதவி உயர்வுக்கு மட்டுமல்ல வேறு பல பணப்பலன்களுக்கும் CNL அவசியம்
*எப்பவும் போல் மெதுவா பண்ணுவோம்னு இருந்தீங்கன்னா சீனீயாரிட்டியில் பின் செல்லவும் வாய்ப்பு உண்டு* பிறகு அதை சீர் செய்ய சிரமப்பட வேண்டும்.
என்றும் உங்கள் நலனில்
பா.மணிகண்டன்
செவிலிய கண்காணிப்பாளர்
திருநெல்வேலி