அன்புடையீர் வணக்கம்.
தமிழ்நாடு அரசு செவிலியர்கள் மற்றும் தாதியர் குழுமம் (Tamil Nadu Nurses and Midwives Council) செவிலியர்கள் (Nurse), துணை செவிலியர்கள் (ANM), சுகாதார பார்வை அதிகாரிகள் (Health Visitors) ஆகிய அனைவரையும் தங்களுடைய பதிவை புதுப்பிக்க கோரி பல ஆண்டுகளாக கேட்டு வருகிறது.
தங்களுடைய பதிவு பெற்ற செவிலியர், துணை செவிலியர் சுகாதார பார்வை அதிகாரி உரிமம் கொண்டவர்கள் மட்டுமே அப்பணியை அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் பணி செய்ய தகுதி வாய்ந்தவர்கள் ஆவார்கள்.
BSc MSc படிக்க போகும் போது Renewal கேட்கிறார்கள், NABH, NQAS, MCI Visit இன் போது Renewal கேட்கிறார்கள். CNE நடத்த வேண்டும் என்றாலும் Renewal கேட்கிறார்கள்.
(எப்படி வாகன ஓட்டிகள் அனைவரும் வாகன ஓட்டி உரிமம் வைத்திருக்க வேண்டுமோ அதுபோல மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், துணை சுகாதார செவிலியர்கள், சுகாதார அதிகாரிகள் பல் மருத்துவர்கள், பல் மருத்துவ மெக்கானிக்கள் போன்றவர்கள் தங்களுடைய பதிவுகளை பதிவுசெய்து இருக்க வேண்டும், குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு பதிவினை புதுப்பித்து வைத்திருக்க வேண்டியது அரசு விதிகளின்படி கட்டாயமாகும்.)
அவ்வாறு பதிவு செய்யாமலும் அல்லது செய்த பதிவினை புதுப்பிக்காமல் தனது பணியினை செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்று தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமம் வலை தளத்தில் கூறப்பட்டுள்ளது.
பல்வேறு செவிலியர்கள், துணை செவிலியர்கள், சுகாதார பார்வை அதிகாரிகள் இதுநாள் வரை தங்களுடைய பதிவை புதுப்பிக்காமல் இருப்பதால் நமது தமிழகத்தில் எத்தனை செவிலியர்கள் தற்போது பணியில் உள்ளனர், எத்தனை செவிலியர்கள் பதிவு செய்து பணியில் இல்லை போன்ற தகவல்கள் செவிலியர் குழுமத்தில் இல்லை என்பதே நிதர்சன உண்மை.
மேலும் மிக குறைந்த செவிலியர்கள் பதிவுசெய்து புதுப்பித்தல் செய்து வருவதால் செவிலியர் குழுமமும் தான்தோன்றித்தனமாக பணிகளை செய்து வருகிறதே தவிர செவிலியர்களின் நலனில் எவ்வித அக்கறையும் காட்டாமல் இருப்பதுதான் தற்போதைய நிலையாக உள்ளது
தமிழ்நாடு செவிலியர் குழுமத்தின் அதிகாரங்களை பயன்படுத்தி அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும், அனைத்து தலைமை மருத்துவமனைகளிலும் அனைத்து வட்ட மருத்துவமனைகளிலும் பணி புரியும் செவிலியர்கள் அனைவருக்கும் போதுமான தொடர் செவிலிய பயிற்சியினை (CNE) அளிப்பதற்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.
இவற்றை எதையும் செய்யாமல் செவிலியர்களின் மீது திடீரென ஒரு பெரும் தாக்குதலை போல் இந்த செவிலிய புதுப்பித்தல் செய்ய சொல்வது வருத்தமளிக்கிறது.
வருகின்ற செப்டம்பர் 2022 மாதம் வரை இந்த புதுப்பித்தலுக்கான காலக்கெடு விதித்து இருக்கிறார்கள் எனவே செவிலியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தங்களுடைய பதிவு பெற்ற செவிலியர் உரிமத்தினை புதுப்பித்தல் செய்து நீட்டித்துக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.