அனைவருக்கும் வணக்கம்.
நேற்று IGNOU பற்றி வந்தது போன்ற செய்திகளை நான் எப்போதும் கடந்துவிடுவேன், ஆனால் ஐயா கலைஞர் கூறியது போல *”கோவில் கூடாது என்பதல்ல கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்பதே”*
நான் படிக்கும் போது எங்களுடைய மெடிக்கல் சூப்பிரண்டண்ட் கூறினார் உங்களுக்கு என்ன வேணும்ன்னு கேளுங்க அதவிட்டுட்டு அவனுக்கு அத தராதீங்க, இவனுக்கு இத தராதீங்கன்னு சொல்லாதீங்க என்றார்.
அதுபோல ஒரு முன்னேற்ற சங்கம் எப்படியாவது உடன் இருப்பவர்களை தூக்கிவிட எண்ண வேண்டும், அதைவிட்டு மற்றவர்களின் காலை வாரி விட்டு அவர்கள் மேல் ஏறி நின்று முன்னேற நினைத்தால் அது என்றாவது ஒரு நாள் சரிந்தே விழும்.
தமிழக சுகாதார துறையில் தற்போது அரசு பணியில் உள்ள செவிலியர்களுக்கு Post Basic BSc Nursing படிக்க 70 இடங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் IGNOU வில் சென்ற வருடம் 90 இடங்களும், இந்த வருடம் இது போன்ற கயவர்களின் எண்ணத்தால் 60 இடங்களும் மட்டுமே உள்ளன.
*நம் முதல்வர், நமக்கான முதல்வருக்கு என்னுடைய பணிவான வேண்டுகோள், தமிழக அரசு இன்னும் 10 கல்லூரிகளில் IGNOU மூலம் Post Basic BSc Nursing படிக்க அனுமதிக்க வேண்டும், (TNC Recognised) அப்படி செய்தால் பல ஏழை எளிய Diploma செவிலியர்கள் பட்ட படிப்பு தகுதி பெற்று, மாநில, மத்திய அரசிலும், அயல் நாட்டிலும் நல்ல ஊதியத்தில் பணி அமர்வார்கள்*
இது எல்லாம் குறுகிய எண்ணம் கொண்ட, பல்கலைக் கழகத்தின் பேரே தெரியாத பட்டதாரி செவிலியரின் சிறிய மூளைக்கு எட்ட வாய்ப்பில்லை.
IGNOU பற்றி அவர்கள் அனுப்பிய Whatsapp செய்தியில் என்னென்ன பொய் பித்தலாட்டங்கள் உள்ளது, அவர்கள் எத்தகைய கொடியவர்கள் என்பதை தெளிவு படுத்துவதே இந்த பதிவின் நோக்கம்.
1. ஆரம்பிக்கும் போதே தற்போது பரவலாக INGNOU Post Basic BSc Nursing Course பற்றி பேசப்பட்ட்டு வருகிறது என தப்பும் தவறுமாக, பல்கலைக் கழகத்தின் பெயரையே தவறாக ஆரம்பிக்கிறார் அவர், Indhira Gandhi National Open University என்பதை சுருக்கி IGNOU என கூறுவர் என்பது கூட அந்த பட்டதாரி செவிலியருக்கு தெரியவில்லை.
2. அரசு மருத்துவமனையில் பணி செய்யக்கூடிய அனைவருக்கும் இது முக்கியமான பதிவாகும் என இரண்டாவது வரியில் கூறியுள்ளார். *அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பலருக்கு இன்னும் பணி வரன்முறை கூட செய்யப்படவில்லை, தனியார் கல்லூரியில் பட்டம் பயின்ற செவிலியர்களுக்கு 10 வருடங்களாக ஊதிய உயர்வு இல்லை, நம்முடன் பணிபுரிந்த Sanitary Worker, Record Clerk, Record Assistant, OS, JAO என பலகட்ட பதவி உயர்வு பெறும் போது செவிலியர்கள் செவிலியர்களாகவே உள்ளனர்* இப்படி பல்வேறு பல்வேறு அரசு செவிலியர்களின் பிரச்சனைகள் பற்றி பேசுவார் என பார்த்தால் பாராளுமன்றத்தால் தோற்றுவிக்கப்பட்ட, அனைத்து மாநில அரசுகளும் ஏற்று கொண்ட, இந்திய செவிலியர் குழுமம் அங்கீகரித்த கல்லூரியின் படிப்பு பொய் என பேதமை கொண்டு பேசுகிறார்.
3. இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக் கழத்தின் தொலைதூரக் கல்வி முறை என ஒன்றை குறிப்பிடுகிறார். ஆனால் அது ODL முறை ஆகும், ODL என்பதற்கு Innovation in Open and Distance Learning (ODL) system in India: The Need to Remove Systemic Barriers என்ற விளக்கம் IGNOU கொடுக்கிறது, To Read
https://bit.ly/ODLExpl
4. அடுத்து ஒரு படிப்பை படிப்பாக அங்கீகரிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு தான் உள்ளது என கூறுகிறார். UPSC தேர்வாணையம் கூட UGC Recognised Degree தான் கேட்கும் பாராளுமன்றம் அங்கீகரித்த Degreeய நர்சுக்கு கொடுக்க நான் எங்க போவேன். என IGNOU வையே அலற வைக்கிறார்.
5. அரசு ஆணை எண்:- 928 மக்கள் நலவாழ்வு நாள் 21-4-2017 என்ற அரசாணை மதுரை, சென்னை, டெல்லி உச்ச நீதி மன்றம் இரத்து செய்துள்ளது என பொய்யாக திரித்து கூறி உள்ளார் G.O. Ms No 928 H&FW Dated:-21-4-2017
https://bit.ly/gomsno928
இத்தனை நீதிமன்றம் இரத்து செய்த படிப்பையா, 16-2-2021 நாளிட்ட உயர்கல்வி துறையின் அரசாணை எண்:-41 இல் இந்திராகாந்தி தேசிய பல்கலைக்கழத்தின் BTech / Diploma படிப்புகள் நேரடி Diploma, Degree படிப்புகளுக்கு சமம் என ஆணை வெளியிட்டது. GO
https://bit.ly/go41he
6. அப்படி அனைத்து கோர்ட்டினாலும் இரத்து செய்யப்பட்ட ஒரு அரசாணையை அடிப்படையாக கொண்டு எப்படி செவிலியர்கள் தங்களுடைய படிப்பை Nursing Council இல் பதிவு செய்திருக்க முடியும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லை அந்த பட்டதாரி செவிலியருக்கு.
7. தொலை தூர கல்வி முறையை கொண்டு எந்த வித பதவி உயர்வு பெற முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது என ஒரு வரி கூறியுள்ளார். இது முழுக்க முழுக்க பொய், முறையான கல்வி முறையின்றி (10+2+3 Stream) வயதின் அடிப்படையில் திறந்த வெளி பல்கலைக் கழகத்தில் பெற்ற படிப்புகளை கொண்டு பதவி உயர்வு கேட்க கூடாது என்று தான் கூறியுள்ளது ( உதாரணமாக திறந்த வெளி பல்கலைக் கழகத்தில், படிக்க எழுத தெரிந்தவர் 33 வயது நிரம்பி இருந்தால் நேரடியாக MSc / MA பட்டம் பெறலாம், ஆனால் அப்பட்டத்தை அடிப்படையாக கொண்டு, பணி / பதவி உயர்வு கோர முடியாது, முறையாக 10 ம் வகுப்பு முடித்து, பின் 12 ம் வகுப்பு முடித்து, பின் 3 வருட பட்டம் பெற்று பின் 2 வருட MA / MSc படிப்பு படித்திருக்க வேண்டும் அப்பணி / பதவி உயர்வுக்கு)
8. IGNOU வில் Post Basic BSc Nursing படித்தவர்களை தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் பதிவு செய்ய கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என கூறியுள்ளார், ஏங்க உச்சநீதிமன்றம் என்ன நீ படிக்க கூடாது, நீ வேலைக்கு போக கூடாது, நீ பதிவு பண்ண கூடாதுன்னா சொல்லும் அமைப்பா, அப்படி சொல்லி இருந்தா அதையெல்லாம் Council படிக்காமலா இருக்கும் 26-3-2022 அன்னைக்கு Indian Nursing Council ( https://bit.ly/INCLIST ) Page No 8 or Tamil Nadu Nursing Council ( https://bit.ly/tnclist ) உள்ள போனா கூட Recognised Institute பக்கத்துல IGNOU இருக்கு,
மேலும் கடந்த 1-11-2021 அன்று DMS அவர்கள் கோரிய பட்ட செவிலியர்கள் பட்டியலில் IGNOU வில் படித்தவர்களின் பட்டியலை அனுப்ப கோரி உள்ளனர், நீதிமன்றம் தடை விதித்திருந்திருந்தால், இந்தியாவிலேயே பழைமையான ஒரு இயக்குநகரகம் அப்பெயரை கூறி இருக்குமா லெட்டர்
https://bit.ly/NTPANELCALL
9. இவர்களுக்கு என்ன எண்ணம் என்றால், நாம் Whatsapp இல் எது அனுப்பினாலும் முட்டாள் செவிலியர்கள் நம்பி விடுவார்கள், நாம் *நர்சிங் டுயுட்டர் பேனலில்* IGNOU வில் படித்த செவிலியர்களின் பெயரை திருட்டுத் தனமாக கழட்டி விட்டு விட்டு புதிய பேனல் வெளியிட செய்து விடலாம், என்ற நல்ல எண்ணம்,
10. இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழத்தில் செவிலியர்களுக்கு School of Health Science இல் மொத்தம் 17 படிப்புகள் உள்ளன. இதுவே பெரிய msg என்பதால் அந்த படிப்புகளை தனி msg ஆக அனுப்பி உள்ளேன்.
உன்மையாக அவர் கூறும் அந்த சங்கத்தின் பெயர் கொண்டு இருந்தால், பல மருத்துவ கல்லூரிகளில் இன்னும் School of Nursing, College of Nursing திறக்கப்படவில்லை அவற்றை திறக்க வேண்டுவதன் மூலம் இன்னும் பல Nursing Tutor போஸ்ட்டுகளை உருவாக்கலாம்.
2:1 என்ற விகிதத்தில் நேரடி தேர்வு மூலம் Nursing Tutor களை Appoint செய்ய ஒதுக்கி வைக்கப்படும் போஸ்ட்டுகளை இப்போதே நிரப்ப கோரலாம்.
மருத்துவமனைகளில் BSc Physician Asst, BSc Critical Care Technician என பல்வேறு Degree படிப்புகள் வந்தபிறகும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க Clinical Instructor என்ற பதவி இல்லை அப்படி ஒன்றை உருவாக்கி அதில் பட்ட செவிலியர்களை பணி அமர்த்த சொல்லலாம்.
NABH, NQAS, LAQSHYA, MUSQAN பொன்ற Quality Related திட்டங்களில் OSCE மாதா மாதம் நடத்த வேண்டி உள்ளது அதில் செவிலிய போதகர்களுக்கு Promotion பதவிகளை வழங்க கோரலாம்.
அதையெல்லாம் விட்டுவிட்டு பட்டம் படித்த செவிலியர்களிடம் IGNOU வில் படித்தவர்கள் பெயரை நீக்கி விடலாம், நாம் மட்டும் போஸ்டிங் வாங்கிவிடலாம், அதுக்கு கொஞ்சம் செலவாகும் என தவறான தகவல் பரப்பி, நாளை IGNOU வில் படித்தவர்கள் முழித்துக் கொண்டால் உங்கள் பின்னால் வந்தவர்களின் வாழ்க்கையையும் சீரழிக்க நினைப்பது என்ன நியாயம்.
*இந்திரா காந்தி தேசிய பல்கலைக் கழக Post Basic Bsc Nursing படிப்பு ஒரு அங்கீகரிக்கப்பட்ட, பதவி உயர்வு, MSc Nursing படிக்க தகுதி உடைய படிப்பு*
அதில் படிப்பதும், படிக்காததும் தனிநபர் விருப்பம்.
I.Certificate in Health Care Waste (CHCWM)
II. Certificate in Newborn and Infant Care (CNIN)
III. CERTIFICATE IN FIRST AID (CFAID)
IV. Certificate in Maternal and Child Health Care (CMCHN)
V.Certificate in home based health care (CHBHC)
VI.Certificate in Community Health For Nurses (BPCCHN)
VII.Certificate In Geriatric Care Assistance (CGCA)
VIII. Certificate In General Duty Assistance (CGDA)
IX. Certificate In Phlebotomy Assistance (CPHA)
X.Certificate In Home Health Assistance (CHHA)
XI.Certificate Programme In Yoga
*XII.Diploma in Nursing Administration*
XIII. Diploma In Critical Care In Nursing (DCCN)
XIV. Bachelor of Science -Nursing
XV. Post Graduate Diploma in Maternal & Child Health
XVI. Post Graduate Diploma in Geriatric Medicine
XVII. Post Graduate Diploma in Hospital and Health Management (PGDHHM)