365 Days Maternity Leave Government Order

மகப்பேறு விடுப்பு 1.7.2021 முதல் 1 ஆண்டாக உயர்த்தி அரசாணை வெளியீடு.

1.7.2021 க்கு முன்னதாக மகப்பேறு விடுப்பில் உள்ளவர்களும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 9 மாதத்திற்கு பதிலாக ஓராண்டு அதாவது 365 வரை மகப்பேறு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.


வணக்கம் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு இதற்கான அரசாணை வந்துள்ளது அனைவருக்கும் எழுந்துள்ள கேள்வி என்னவெனில் நான் தற்போது மகப்பேறு விடுப்பில் உள்ளேன் எனக்கு இந்த 365 நாட்கள் உண்டா இல்லையா என்பதுதான்.

பொதுவாக அரசாணைகளை இரண்டாகப் பிரிக்கலாம் 

 1)வெளிவந்த நாள் முதல் செல்லுபடியாகும் அரசாணை.

 2)முன்னர் தேதியிட்ட நாளிலிருந்தே செல்லுபடியாகும் அரசாணை ஆகிய இரண்டு வகை ஆகும்.

தற்போது வெளியாகி உள்ள அரசாணை 1-7-2021 முதல் செல்லுபடியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 அரசாணையின் அதே பகுதியிலேயே இந்த அரசாணை 1-7-2021 க்கு முன்னர் மகப்பேறு விடுப்பில் இருக்கும் ஊழியர்களும் இந்த 365 நாட்கள் மகப்பேறு விடுப்பை எடுத்துக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே அரசு ஊழியர்கள் தற்போது மகப்பேறு விடுப்பில் இருப்பவர்கள் இந்த 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு எடுத்துக் கொள்ள அரசாணை தெளிவுபடுத்துகிறது.

ஏற்கனவே 270 நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு எடுக்க மருத்துவ சான்று வழங்கி இருந்தால் அந்த சான்றுக்கு மீதமுள்ள நாட்களுக்கான மகப்பேறு விடுப்பு எடுப்பதற்கான மருத்துவ சான்று பெற்று ஊதியம் பெற்று வழங்கும் அலுவலருக்கு வழங்க வேண்டும் 

நன்றி.


மகப்பேறு விடுப்பு அரசாணை 84 ம.வ.மே.துறை நாள் 23/08/21 சார்ந்து சில விளக்கங்கள்...

1) மகப்பேறு விடுப்பு *270 நாட்களில் இருந்து 365 நாட்களாக* உயர்த்தப்பட்டுள்ளது
(12 மாதங்கள்)

2) 01.07.2021 முதல் அமலுக்கு வருகிறது...

01.07.21 க்கு பிறகு விடுப்பு எடுப்பவர்களுக்கு 1 ஆண்டு விடுப்பு...

 இதில் தான் பலருக்கு சந்தேகம்...

3) 01.07.2021 க்கு முன்பிருந்து
01.07.2021 அன்று விடுப்பில் இருப்பவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்..

4) *தற்போது மகப்பேறு விடுப்பில் இருப்பவர்கள் இந்த அரசாணையை பயன்படுத்திக் கொள்ளலாம்...* 

5) 01.07.21 முதல் 23.08.21 வரை 9 மாத  மகப்பேறு விடுப்பு முடித்து பணியில் சேர்ந்தவர்கள் இந்த கூடுதல் 3 மாத விடுப்பை பயன்படுத்த இயலாது..

அவர்கள் மருத்துவர் தகுதி சான்றிதழ் அடிப்படையில் தான் விடுப்பு முடித்து பணியில் சேர்ந்து இருப்பார்கள்...
எனவே *மீண்டும் மகப்பேறு விடுப்பு வழங்க இயலாது...* 

அதே சமயம்... சிலர் 1/7/21 முதல் 23/08/21 வரை 9 மாதம் மகப்பேறு விடுப்பு முடிந்த பிறகும் மருத்துவ காரணங்களுக்காக *விடுப்பில் இருந்தால்* அவர்கள் இந்த 365 நாட்கள் விடுப்பை பயன்படுத்த இயலும்..

6) குழந்தை பிறப்பிற்கு முன் + குழந்தை  பிறப்பிற்கு பின் இந்த விடுப்பை எடுத்துக் கொள்ளலாம்...
(குழந்தை பிறந்த தினத்தில் இருந்து விடுப்பு கட்டாயம் துவங்க வேண்டும்)

7) உயிரோடு உள்ள *இரண்டு குழந்தைகள்* வரை இந்த விடுப்பு உண்டு ..

8) *தகுதி காண்* பருவத்தினர் 
 *தற்காலிக* பணியினர்களுக்கும் மகப்பேறு விடுப்பு உண்டு...

9) அதிக நண்பர்களின் ஐயம்-
 மனைவி மகப்பேறு விடுப்பு போது *ஆண்களுக்கு விடுப்பு* உண்டா - தமிழக அரசில் அப்படி ஒரு விடுப்பு கிடையாது🙏🏻


தாயும் சேயும் நலமாக வாழ வாழ்த்துகளுடன் 💐💐💐

2 Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. என் மனைவி 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு முடிந்து கடந்த 21.08.2021 அன்று பணியில் இணைந்தார் .இந்த அரசாணை 23.08.2021 தேதியில் வந்ததால் என் மனைவிக்கு இந்த மகப்பேறு நீட்டிப்பு பொருந்துமா ? மருத்துவ மனையில் உள்ள உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது பொருந்தாது என்று கூறி விட்டார்கள் ....

    ReplyDelete
Previous Post Next Post