அரசு மருத்துவமனைகளில் அக்கவுண்ட் புக் எழுதுவது எப்படி?
அனைத்து அக்கவுண்டு புக்குகளிலும் பக்கச் சான்று அளிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
மேலே எந்த பொருளுக்கான அக்கவுண்ட் கணக்கிடப்படுகிறது என்பது பெரிதாக எழுதப்பட்டிருக்க வேண்டும் .
எழுதக்கூடிய பக்கம் மொத்தம் ஏழு பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருக்க வேண்டும்
முதல் பகுதி நாள் குறிப்பிடவேண்டும்
இரண்டாம் பகுதியில் ஸ்டோரில் இருந்து பெறப்பட்டது பயன்படுத்தப்பட்டது போன்றவை எழுதப்பட வேண்டும். (Received From the Store, Used, Used for IP No 00000)
மூன்றாம் பகுதியில் ஸ்டோரில் இருந்து பெறப்படும் போது மட்டுமே எண்ணிக்கை எழுதப்பட வேண்டும்.
நான்காம் பகுதியில் பெறப்பட்டவை மட்டும் எழுதப்பட வேண்டும்.
ஐந்தாம் பகுதியில் நோயாளிக்கு வழங்கிய எண்ணிக்கை எழுதப்பட வேண்டும்.
ஆறாம் பகுதியில் மீதம் உள்ள எண்ணிக்கை எழுதப்படவேண்டும்
கடைசி பகுதியில் செவிலியரின் கையொப்பமும் அடுத்த பகுதியில் செவிலியர் கண்காணிப்பாளரின் கையொப்பம் இடுதல் வேண்டும்.
ஊசி மருந்துகள் போன்றவை ஸ்டோரில் இருந்து பெறப்படும் போது அவற்றின் பேச் எண், தயாரிக்கப்பட்ட தேதி, எக்ஸ்பையரி தேதி எழுதப்பட்டிருக்க வேண்டும்.
செவிலியர்கள் செவிலியர் கண்காணிப்பாளர்களின் கையொப்பம் மற்றவர்களுக்கு தெரியும்படி இட வேண்டும்.
கொக்கி போடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
முன் பக்கத்தில் இருந்து கொண்டுவரப்படும் பேலன்ஸ் எண் ஆனது நேரடியாக ஐந்தாவது பகுதியில் பேலன்ஸ் காலத்தில் எழுதப்பட வேண்டும் மூன்றாம் காலத்தில் எழுதப்பட கூடாது.
அடுத்த பக்கத்திற்கு செல்லும் பொழுது கண்டிப்பாக கோடிட்ட பிறகு தான் எழுத வேண்டும்
மாதிரி அக்கவுண்ட் புத்தகம்
Oxygen
Mask Page No:- 1 |
||||||
Date |
Particulars |
Received |
Issued |
Balance |
Staff Nurse Sign |
Nursing Suptd Sign |
20-06-2021 |
Received From the Store |
100 |
- |
100 |
|
|
21-06-2021 |
Used for IP No:- 1111,1112,1113,1114,1115, 1116,1117,1118,1119,1120 |
|
10 |
90 |
|
|
22-06-2021 |
Used for IP No;- 1121,1122,1123,1124,1125, 1126,1127,1128,1129,1130 |
|
10 |
80 |
|
|
23-06-2021 |
Received From the Store |
50 |
- |
130 |
|
|
|
|
|
|
|
|
|
Any G.O or guidelines related take over surgical stock equipment.
ReplyDeleteஎந்த rate limit வரைக்கும் staff nurse account (எதுக்கு மேல் doctors account).
Send me.