2015 ஆம் வருடம் நடைபெற்ற MRB Exam Question பெறுவது எப்படி?

MRB ஆனது 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வின் கேள்வித்தாளை RTI மூலம் வழங்குகிறது அதனை பெறுவது எப்படி என்பதை இங்கு காணலாம்.

ஒரு A4 Size வெள்ளைத்தாளை எடுத்து அதில் கீழ்கண்டவாறு விண்ணப்பம் தயார் செய்ய வேண்டும்.

அனுப்புநருக்கு அருகில் ரூ. 10 மதிப்புள்ள நீதிமன்ற வில்லை ஒட்ட வேண்டும், இது விண்ணப்ப கட்டணம் ஆகும்,

நீதிமன்ற வில்லை (Court Fees Stamp என ஆங்கிலத்தில் கூறுவர்) அனைத்து மாவட்டங்களிலும் தாசில்தார் அலுவலகம் அருகில் உள்ள Xerox கடைகளில் கிடைக்கும்.

விண்ணப்பத்தினை பதிவு அஞ்சலில் கிழே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
பொதுத்தகவல் அலுவலர் அவர்கள், தேர்வு வாரியம்,
7 வது மாடி, DMS கட்டிடம்,
DMS வளாகம்,
359, அண்ணா சாலை,
சென்னை.
600 006.
தமிழ் நாடு.


ஏன் பழைய கேள்வித்தாள் வேண்டும்?

தேர்விற்கான பாடத்திட்டம் கூறினாலும் எந்த பகுதியில் இருந்து எவ்வளவு கேள்விகள் வருகிறது.

கேள்வி நேரடியாக உள்ளதா, நாம் பயன்படுத்தி பதிலளிக்க வேண்டுமா என்பதை பழைய கேள்வித்தாள்கள்தான் கூறும்.

AIIMS, JIPMER, ESI, MRB, என எந்த போட்டித் தேர்வுக்கு தயாரானாலும் முந்தைய வருடத்திய கேள்வித்தாள்களை ஒரு முறையாவது கண்டிப்பாக படித்து விடை அறிந்து இருக்க வேண்டும்.

பிறகு போட்டித்தேர்விற்கான பாடத்திட்டத்தினை படிக்க வேண்டும், MRB தேர்விற்கு Diploma Level கேள்வி இருக்கும் என்பதால் Syllabus வைத்து அந்த பகுதியை மட்டும் படித்தால் போதும்.

YouTube, Unacademy (mobile app) களில் நிறைய வீடியோ வகுப்புகள் இலவசமாக உள்ளன் அவற்றையும் பயன்படுத்துங்கள்.

MRB தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

-------------------------------------------------------------------

அனுப்புநர்.
                                                     (இங்கு)
உங்கள் பெயர்,                     (ரூ.10/- க்கான)
உங்கள் முழு முகவரி,           (நீதிமன்ற)
Pin Code,                                     (வில்லை)
                                                       (ஒட்டவும்)

பெறுநர்.

பொதுத்தகவல் அலுவலர் அவர்கள்,
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்,
சென்னை - 6.

அய்யா / அம்மா வணக்கம்.

பொருள் :- தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் சில தகவல்கள் கோருதல் தொடர்பாக.

1) கடந்த 2015 ஆம் ஆண்டு நமது MRB மூலம் செவிலியர்களுக்கு நடத்திய போட்டித்தேர்வின் வினாப்புத்தகம் ஒன்றினை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

2) கடந்த 2015 ஆம் ஆண்டு நமது MRB மூலம் செவிலியர்களுக்கு நடத்திய போட்டித்தேர்வின் விடைக்குறிப்பினை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

3) இந்த விண்ணப்பத்திற்கான கட்டணம் ரூ. 10 ஐ நீதிமன்ற வில்லையாக ஒட்டியுள்ளேன்.

4) வினாப்புத்தகமும், விடைக்குறிப்பும் வழங்க வேறு ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டும் எனில் அதனை எவ்வாறு செலுத்த வேண்டும் என கூறினால் செலுத்த தயாராக உள்ளேன்.

நன்றி

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள.



(கையொப்பம்)


இடம்:
நாள்:

-------------------------------------------------------------------

Post a Comment

Previous Post Next Post