போனஸ் வரலாறு அறிவோமா?



பொங்கல் போனஸ் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு அரசாணையில்  கருணைத்தொகை என விளிக்கப்படும் இதன் பெயர் கொடுபடா ஊதியம்.

அது என்ன கொடுபடா ஊதியம்?

ஒரு காலத்தில் அரசு ஊழியர்களுக்கு இன்றைய கூலித்தொழிலாளிக்கு வழங்குவது போலவே வாரச்சம்பள முறை தான் இருந்தது.

வாரா வாரம் சம்பளம் கொடுப்பதில் இருந்த நிர்வாக சிரமத்தை தணிக்க அரசு ஒரு முடிவிற்கு வந்தது.

வாரச்சம்பளத்தை மாதச்சம்பளமாக்க முடிவு செய்த அரசாங்கம் அதற்காக ஒரு மாதத்திற்கு நான்கு வாரம் என கணக்கிட்டு நான்கு வார சம்பளத்தை தொகுத்து ஒரு மாத சம்பளமாக வழங்கியது.

ஒரு மாதத்திற்கு நான்கு வார சம்பளம் என்றால் பனிரெண்டு மாதத்திற்கு (12×4= 48 ) நாற்பத்தெட்டு வார சம்பளம்

 ஆனால் வருசத்துக்கு 52 வாரம்.

அப்போது அந்த நாலு வார ஊதியம்?

அதைத்தான் கொடுபடா ஊதியமாக அரசு, அரசு ஊழியருக்கு வழங்கியது.

உச்ச வரம்பின்றி ஒரு மாத போனஸ்.

ஆனால் கொடுபடா ஊதியம்  எப்படி போனஸ் ஆகி கருணைத்தொகை ஆனது.

அதில் தான்  அரசின் சூழ்ச்சியும்  சதிகளும் உள்ளன.

Post a Comment

Previous Post Next Post