Independent Nurse Practitioner Act




          வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஒருவர் நோயினால் பாதிக்கப்பட்டால் அவரை ஒரு தகுதிவாய்ந்த செவிலியர் பரிசோதனை செய்து அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கும் சுதந்திர செவிலியர் தொழில்முறை (Independent Nurse Practitioner) உள்ளது.  ஆனால் வளர்ந்த நாடுகளின் உள்ள தொழில்நுட்பம், உட்கட்டமைப்பை இந்தியாவில் புகுத்த நினைக்கும் இந்திய அரசாங்கம் செவிலியர்கள் மட்டும் எந்த வகையிலும் சமூக அந்தஸ்து மற்றும் பொருளாதார நிலையில் முன்னேறி விடக்கூடாது என்ற கொள்கையை கடைப்பிடித்து வருகிறது.


          இதனையே தாரக மந்திரமாக கொண்டு சுகாதார அமைப்புகளான மருத்துவ கவுன்சில் (MCI), செவிலியர் கவுன்சில் (INC), மற்றும் சுகாதார அமைச்சகமும் (MOHFW) செவிலியர்களின் அடிப்படை உரிமையான சுதந்திர செவிலிய தொழில்முறையை (Independent Nurse Practioner) நடைமுறைப்படுத்த முட்டுக்கட்டைகள் போட்டு வருகின்றன.



           இந்திய செவிலியர் கவுன்சில் தற்போது அறிமுகப்படுத்திய Nurse Practitioner Course எனும்  Post Graduate Nursing படிப்பை கூட ஒரு சார்பு படிப்பாக அறிமுகப்படுத்தியதே தவிர Independent Nurse Practitioner Course ஆக அறிவிக்கவில்லை. இதனை பல்வேறு தளங்களில் எழுத்துப்பூர்வமாகவும் இந்திய செவிலியர் கவுன்சில் அறிவித்துள்ளது.


மருத்துவ துறையில் உள்ள மற்ற சக தோழமை  Technicianகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர். உதாரணமாக ஒரு மருந்தாளுநர், மருந்தாளுநர் படிப்பை முடித்துவிட்டு சொந்தமாக Pharmacy நடத்தலாம். ஒரு ஆய்வக நுட்புனர் Lab Technician Course - ஐ முடித்து விட்டு சொந்தமாக Clinical Lab வைத்து கொள்ளலாம், ஆனால் ஒரு செவிலியர் இவை அனைத்து தொழில்நுட்பமும் முறையாக பயின்றும் சொந்தமாக ஒரு Nursing Care Centre நடத்த முடியாது. ஒரு கொத்தனார் கூட தன் தொழிலை சுதந்திரமாக செய்ய உரிமை அளித்துள்ள இந்திய அரசியல் சாசனம், செவிலியர்களை MCI, INC போன்றவைகள் மூலம் அடிமைப்படுத்துவது ஏன் என்பது தான் புரியாத புதிர்.


இந்திய செவிலிய கவுன்சிலில் ஆயிரம் ஆயிரம் செவிலியர்கள் பதிவு செய்தாலும், பல்வேறு ஆற்றல்மிகுந்த Registrar - கள் வந்தாலும் அவர்கள் அன்று முதல் இன்று வரை அடிமை தனத்தையே செவிலிய பயிற்சி மாணவர்களிடையே வளர்த்து வருகிறார்கள் தவிர சுய மரியாதை, சுய சார்பு தொழில் திறமையை வளர்க்க அவர்கள் தவறி விட்டனர். அதற்கு உதாரணம் இந்திய செவிலியர் கவுன்சில் தற்போது அறிமுகப்படுத்திய Nurse Practitioner Course ஆகும்.


          கடந்த வருடம் தமிழக அரசில் மருத்துவ படிப்பு படிக்கும் பயிற்சி மாணவர்கள் அவர்களின் பயிற்சியை செய்ய மாட்டேன் என கூறிய போது நமது செவிலியர்கள் சங்கம் Independent Nurse Practitioner Act க்கான ஒரு கல்லை நகர்த்தி இருக்கலாம், நாங்கள் மருத்துவரின் பரிந்துரைப்படி மருத்துவமனையிலும் ஊசி போடுகிறோம். வீட்டிலும் தனியாக Nursing Care Centre வைத்து மருத்துவரின் பரிந்துரைப்படி ஊசி போடுகிறோம் என கூறி இருக்கலாம்.


          ”வரப்புயர நெல் உயரும்” என்பது போல எப்பொழுது ஒவ்வொரு தனி செவிலியரும் சமூக, பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைகிறாரோ அப்பொழுது தான் இந்த மாண்புமிகு சேவை செவிலிய சமுதாயம் முன்னேற்றம் அடையும் இங்கு இருக்கும் யாரும் மறுக்க இயலாது.


            தற்போது கேரளா மாநிலத்தில் உச்சநீதிமன்ற ஆணைப்படியும், மத்திய அரசு அமைத்த கமிட்டி பரிந்துரைப்படியும் ஊதியம் மற்றும் இதர சலுகைகளை வழங்க கோரி அனைத்து செவிலியர்களும் எவ்வித வேறுபாடுடின்றி ஒன்றிணைந்து போராடி அதில் வெற்றி பெற்றுள்ளனர்.


             அது போல தமிழக மாநிலத்திலும் போராட்ட களத்திற்கு செவிலியர்கள் தயாராகி வருகின்ற இந்த வேலையில் தமிழக அரசு இந்த இந்திய தேசத்திற்கே முண்ணுதரணமாக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியது போல Independent Nurse Practitioner Act ஐ அறிமுகப்படுத்தி பல்வேறு பிணியாள் பாதிக்கப்படும் மக்கள் போலி மருத்துவர்களால் உயிர் வதை படுவதை தடுக்கலாம்.


              தற்போது NEET காரணத்தினால் கிராமப்புற PHC யில் மருத்துவர்கள் பணிபுரிய ஈடுபாடு காட்டுவதில்லை. பயிற்சி பெற்ற செவிலியர்கள் பலர் இருந்தும், செவிலியர்கள் குடியிருக்கும் இடத்தில் முறையான மருத்துவ சிகிச்சை அளிக்க இயலாத நிலை உள்ளது. இதனால் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்திய செவிலியர் கவுன்சிலோ செவிலியர் பல மருத்துவ சிகிச்சைகளை செய்யலாம் என வாயால் கூறிக்கொண்டு இருக்கிறதே தவிர அதனை நடைமுறைப்படுத்த ஒரு துரும்பையும் கிள்ளி போடவில்லை என்பது தான் நிதர்சன உண்மை. சுகாதார குறியீடுகளான Maternal Mortality Rate, Infant Mortality Rate போன்றவற்றை இன்னும் குறைக்க வளர்ந்த நாடுகள் பின்பற்றும் Sustainable Development Goal ஐ பின்பற்றி தனது இலக்கை நகர்த்தி வருகிறது தமிழக அரசு அது போல வளர்ந்த நாடுகளில் நடைமுறையில் உள்ள Independent Nurse Practitioner முறையை இந்திய தேசத்திற்கு அறிமுகம் செய்து பிணி போக்கும் பணியில் முன்னோடியாக திகழலாம்.


             நமது தழிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் ஒரு முன்னோடியாக செயல்பட்டு Tamilnadu Nursing Care Centre என்ற ஒன்றை பதிவு செய்து தற்போது நடைமுறையில் உள்ள சட்ட வரைவுகளுக்கு உட்பட்டும், நவீன கால Tele Medicine, e-Medicine போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும் தமிழகம் முழுவதும் Appollo Pharamacy, Med All Lab போன்ற ஒரு Networked Nursing Care Centre ஐ மருத்துவர் கண்காணிப்பில் நடத்தினால் செவிலியர்களின் பயிற்சி மற்றும் திறன் பொதுமக்களுக்கு கிடைக்கும். பிணியாளரின் சேவையே பிறப்பிலான் பலன் என்பதை அடைய இது ஒரு படிக்கட்டாக அமையும்.


நன்றி


ம. உமாபதி,
செவிலியர்,
அரசு விழுப்புரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை,
முண்டியம்பாக்கம்,
விழுப்புரம்
605601

2 Comments

  1. nurses service and working implementation thinking is ok. But nurses basic necessary needs ??????

    ReplyDelete
Previous Post Next Post