Contract Nurse to Regular Nurse Date of Counselling intimated by DMS

தமிழக சுகாதார துறையில் வேறு எந்த பணியாளருக்கும் இல்லாத ஒப்பந்த முறை செவிலியர்களுக்கு மட்டும் உள்ளது.

ஒப்பந்த முறையால் செவிலியர்களுக்கு சமூக பாதுகாப்பு இல்லை,
தொழில் மரியாதை இல்லை.
அனைத்து தொழில்துறையினருக்கும் மாதிரியாக இருக்க வேண்டிய அரசாங்கமே, செவிலியர்களுக்கு பரபட்சம் காட்டுவதும், செவிலியர் நலனுக்காய் போராட வேண்டிய சங்கங்கள் இதில் அரசியல் பிழைப்பு நடத்துவதும் பெரும் வருத்தமே.

அரசும் இதில் பல்வேறு சூது வேலைகளை செய்து வருகிறது.
தமிழக சட்டசபை வரலாற்றிலேயே முதன்முறையாக தமிழக  முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்கள் பணி மூப்பு அடிப்படையில்  1500 ஒப்பந்த அடிப்படை செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என சட்டசபையில் அறிவித்தும் கூட ”சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்க மாட்டார்” என்பது போல அரசு அதிகாரிகள் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து செவிலியர்களின் வாழ்வினை நாசம் செய்தனர்.

அரசாணை என்ற பெயரில் ஏற்கனவே உள்ள விதிமுறைகளை ஒன்றாக்கி ஒரு அரசாணையாக கொடுத்தது வரலாற்று தில்லாலங்கடி வேலை.

தற்போது சொற்பமாக சுமார் 200 க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான கலந்தாய்விற்கான தேதி இயக்குநர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதம் செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.



Post a Comment

Previous Post Next Post