BSc Nursing படிப்புக்கு ஜூலை 25 முதல் விண்ணப்பம் வழங்கப்படுமா?

BSc Nursing படிப்பிற்கு வருகிற 25ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மருத்துவக்கல்வியில் MBBS மற்றும் பல் மருத்துவத்திற்கு அடுத்த இடத்தில் BSc Nursing பட்டப்படிப்பிற்கு அதிக வரவேற்பு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இதில் பயில இடம் பிடிப்பதற்கு கடும் போட்டி உள்ளது.

மதுரை, தேனி, செங்கல்பட்டு, சேலம், ெசன்னை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் இக்கல்வி கற்றுத்தரப்படுகிறது.


அங்கீகாரம் பெற்ற தனியார் Nursing கல்லூரிகளிலும் இக்கல்வி கற்றுத்தரப்படுகிறது.


இக்கல்விக்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் விண்ணப்பம் வழங்கப்படுவது வழக்கம், இந்த ஆண்டு இதற்கான அறிவிப்பு தாமதமாகி வந்தது.


MBBS மாணவர்கள் சேர்க்கை முழுமையடையாததால் இதற்கான நடவடிக்கையும் தாமதமாகியுள்ளதாக கூறப்படுகிறது.


மருத்துவக்கல்விக்கான 2ம் கட்ட கலந்தாய்வு 18ம் தேதி நடக்க இருந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் BSc Nursing படிப்பில் சேர்வதற்கு ஆர்வம் உள்ளவர்கள் எப்போது விண்ணப்பம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.


இதற்கான விண்ணப்ப விநியோகம் வருகிற 25ம் தேதி முதல் நடைபெறும் என கூறப்படுகிறது.


இதற்கான அறிவிப்பை டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும்.

Post a Comment

Previous Post Next Post