Mutual Fund Awareness for Nurses

Nurse Invest On Mutual Fund

பொறுப்புதுறப்பு (Disclaimer):-
நான் எந்த ஒரு Mutual Fund நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி இல்லை.
---
கடந்த வாரம் திருச்சியில் நாணயம் விகடன் நடத்திய  Mutual Fund குறித்த விழிப்புணர்வு வகுப்புக்கு சென்றிருந்தேன்.
நாம் Share Market அல்லது Mutual Fund என்றதும் எப்போதும் கணிப்பொறி முன்பு அமர்ந்து Sensex இம், Nifty இம் எந்த எண்களில் உள்ளது என பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என என்னுகிறோம்.
அது தவறு.
செவிலியர்களாகிய நாம் சமயோசிதமாக சிந்தித்து  Mutual Fund களில் இப்போதே ரூ.100-ல் இருந்து சேமிக்க பழகலாம், ஏனெனில் ஒரு துறையின் முன்னேற்றம் என்பது தனி ஒவ்வொரு செவிலியரின் முன்னேற்றம் ஆகும்.
ஒரு தனி செவிலியர் முன்னேறாமல் ஒரு துறை முற்றிலுமாக முன்னேற முடியாது.
நம்மிடம் மிகுதியாக,
சாதாரணமாக சேமிக்க இயலும் என்ற,
மிகவும் குறைந்தபட்ச தொகையை மட்டும் Mutual Fundகளில் முதலீடு செய்யலாம்.
நாம் ரூ. 3500/- ஊதியத்திலேயே வாழ்க்கை நடத்திவிட்டோம், நமது எதிர்கால தேவைக்காக கண்டிப்பாக ஒரு குறைந்தபட்ச தொகையை இப்போதே மூதலீடு செய்து சேமிக்கலாம்.
Share Market என்பது நாம் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி, நாமே நமது  அனுபவத்தின் அடிப்படையில் அதனை நிர்வகிப்பது ஆகும்.
ஆனால் Mutual Fund என்பது நாம் கொடுக்கும் பணத்தில் ஒரு தொகையை எடுத்துக் கொண்டு பெரும்பங்கு தொகைக்கு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி, விற்று நமக்கு இலாபம் ஈட்டி தரும் முறை ஆகும்.
நம் மறைமுகமாக ஊதியத்திற்கு பணியாள் வைப்பது போல், Mutual Fundகளில் முதலீடு செய்வது.
---
Mutual Fund என்றதும்
நமக்கு வரும் 3 கேள்விகள்
1) Mutual Fundகள் பாதுகாப்பானதா?
2) Mutual Fundகளில் நமது தேவைக்கு பணம் எடுக்கலாமா??
3) Mutual Fundகளில் வருமான வரி விலக்கு உண்டா??? என்பன.
கண்டிப்பாக Mutual Fundகள் பாதுகாப்பானது. ஆனால் Mutual Fund ல் உறுதியான வருமானம் இல்லை, ஆனால் அதைவிட அதிக வருமானம் உண்டு.
எந்த ஒரு பங்கு வர்த்தகமும் ஒரே நாளில் பலன் தராது. நீண்ட நாள் முதலீடு நல்ல பலன் தரும்.
Mutual Fundகளில் நாம் வங்கி கணக்கு போல முழு தொகையை செலுத்தி தேவையின் போது ATM CARD மூலம் எடுக்கும் வசதிகள் கூட உள்ளன. அல்லது Fixed Deposit போல செலுத்தி வருடத்திற்கு ஒருமுறை எடுக்கும் வசதியும் உண்டு.
ஒரு சில Mutual Fundகளில் 80C விதிப்படி வருமான வரி விலக்கு பெறமுடியும்.
---
Mutual Fundல் முதலீடு செய்ய 3 முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும்.
1) தேவைகள்
2) சரியான Mutual Fund
3) முதலீட்டு தொகை
---
தேவைகள்:-
முதலில் நமது தேவைகளை தீர்மானிக்க வேண்டும்.
முதலீட்டை பொறுத்தவறை,
பணத்தை பாதுகாக்க வேண்டும், பணத்தின் மூலம் வருமானம் பெறவேண்டும்,
அல்லது பணத்தை பெருக்க வேண்டும் என்ற கருத்து மட்டுமே நிலவுகிறது.
இதில் நமது தேவை என்ன என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
உதாரணமாக.
எனக்கு இன்னும் 3 வருடத்தில் கார் வாங்க வேண்டும்.
இன்னும் 5 வருடத்தில்  வீடு கட்ட வேண்டும்.
இன்னும் 15 வருடத்தில் குழந்தையின் மேற்படிப்பிற்கு செலவிட வேண்டும்.
இன்னும் 20 வருத்தில் குழந்தையின் திருமணத்தை நடத்திட வேண்டும்.
இன்னும் 25 வருடத்தில் எனது ஓய்வூதியத்தை பெற வேண்டும்.
இதில் அவசர தேவைக்கு பணம் கொஞ்சம் சேமிக்க வேண்டும்.
மேலும் அடுத்த வருடம் வீட்டிற்கு தேவையான பிரிட்ஜ், வாசிங் மிசின், மிக்சி போன்றவற்றினை வாங்க வேண்டும் என்பன எனது தேவைகள்.
இவற்றில் அவசர தேவை என்பது பணத்தை பாதுகாக்க வேண்டும்
3 வருடத்தில் கார் மற்றும் 5 வருடத்தில் வீடு என்பது பணத்தின் மூலம் வருமானம்
குழந்தையின் மேற்படிப்பு, குழந்தையின் திருமணம், எனது ஓய்வூதியம் ஆகியன பணத்தின் பெருக்குவது போன்றது ஆகும். (ஆனால் நேரடியாக அப்படி அல்ல)
ஆனால் இவை எல்லாவற்றிற்கும் நான் இன்றிலிருந்து தான் முதலீட்டினை துவங்க வேண்டும்.
---
சரியான Mutual Fund:-
மேற்கண்ட தேவைகளுக்கு இறுதியில் நமக்கு தேவைப்படும் தொகை மற்றும் தற்போதைய பணவீக்கம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு Mutual Fund களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதன்மூலம் மாத மாதம் நாம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என அறிந்து கொள்ளலாம்.
இணைய தளங்கள் பல (உதாரணமாக MoneyControl.com) SIP Calculator வழங்குகின்றன, அதன் மூலம் தொகை, என்ன Mutual Fund என்பதை அறியலாம்.
பணத்தை பாதுகாக்க Liquid Fund.
பணம் மூலம் வருமானம் பெற Debt Fund.
பணத்தை பெருக்க Equity Fund களில் முதலீடு செய்யலாம்.
Mutual Fund பற்றி அறிந்த உடன் அது தொடர்பான 10 அல்லது 5 வருட Performance ஐ பார்க்க வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் அது கொடுத்துள்ள வருவாய், எதிர்காலத்தில் அந்த Fund இன் மதிப்பு ஆகியவற்றை அறிந்து செயல்பட வேண்டும்.
நீங்கள் ரூ. 1000 முதலீடு செய்ய விரும்பினால் ரூ.300, ரூ. 300, ரூ. 400 என பிரித்து 3 வெவ்வேறு Mutual Fund களில் மாத மாதம் முதலீடு செய்யலாம்.
(Mutual Fund ல் முதலீடு செய்தவுடன் எவ்வளவு Unit கள் வாங்கியுள்ளனர் என அறிந்து கொள்ளுங்கள். ஆனால் தினமும் பணம் உய்ர்ந்துள்ளதா, குறைந்துள்ளதா என பார்க்காதீர்கள்.)
ஒரே ஒரு Mutual Fund ல் முதலீடு செய்யாமல் 2 மற்றும் 3 Mutual Fund களில் முதலீடு செய்யுங்கள்.
(இப்போதே Moneycontrol.com சென்று ஒரு சில Mutual Fund களை ஆராய்ச்சி
செய்யுங்கள், உதாரணமாக ICICIன் Value Discovery Mutual Fund, Adithya
Birla வின் Frontline Equity, Reliance இன் Growth Mutual Fund களை ஆராய்ச்சி செய்யுங்கள்)
---
முதலீட்டு தொகை:-
மேலே கூறிய உதாரணங்களுக்கு வருவோம். (12% வருவாயில் கணக்கீடு)
ஓய்வூதியம், இன்று என் வயது 30, 58 வயதில் ஓய்வு அடைந்து விடுவேன், இன்று எனது சேமிப்பு இன்றி ஒரு மாதத்திற்கு அனைத்து தேவைக்கும் மாதம் 30,000 தேவைப்படுகிறது என்றால் 28 வருடங்களுக்கு பிறகு மாதம் 1 லட்சம் தேவைப்படும், (இன்றைய 30,000 ரூபாய் தேவை,  28 வருடங்களுக்கு பிறகு 1 லட்ச ரூபாய் தேவை இதுதான் பணவீக்கம் )5 வருடம் உயிருடன் இருந்தால் வருடத்திற்கு 12 லட்சம் என 5 வருடத்திற்கு 60 லட்சம் தேவைப்ப்டும், எனவே நான் இன்றிலிருந்து 28 வருடத்திற்கு ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்ய வேண்டிய தொகை = ரூ. 2175 /- ஆகும்.

எனக்கு கார் வாங்க வேண்டும், அதன் தற்போதைய மதிப்பு 5 லட்சம், கடந்த 3 வருடத்தில் பண வீக்கம் 7 சதவீதம், 3 வருடத்திற்கு பிறகு என் கார் தேவைக்கு நான் இன்றிலிருந்து 3 வருடத்திற்கு ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்ய வேண்டிய தொகை = ரூ. 1150 /-  ஆகும். 

எனக்கு வீடு வாங்க வேண்டும், அதன் தற்போதைய மதிப்பு 15 லட்சம், கடந்த 5 வருடத்தில் பண வீக்கம் 8.5 சதவீதம், 5 வருடத்திற்கு பிறகு என் வீட்டு தேவைக்கு நான் இன்றிலிருந்து 5 வருடத்திற்கு ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்ய வேண்டிய தொகை = ரூ. 1818 /- ஆகும்.

என் குழந்தையின் மேல்படிப்பிற்கு செலவு செய்ய வேண்டும், தற்போது 3 அல்லது 4 வருட படிப்பிற்கு ஆகும் செலவு 30 லட்சம், கடந்த 15 வருடத்தில் பண வீக்கம் 10 சதவீதம், 15 வருடத்திற்கு பிறகு என் குழந்தையின் மேல்படிப்பிற்கு நான் இன்றிலிருந்து 15 வருடத்திற்கு ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்ய வேண்டிய தொகை = ரூ. 5946 /- ஆகும்.

என் குழந்தையின் திருமணத்திற்கு செலவு செய்ய வேண்டும், தற்போது ஒரு திருமணத்திற்கு ஆகும் செலவு 40 லட்சம், கடந்த 20 வருடத்தில் பண வீக்கம் 10.05 சதவீதம், 20 வருடத்திற்கு பிறகு என் குழந்தையின் திருமணத்திற்கு நான் இன்றிலிருந்து 20 வருடத்திற்கு ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்ய வேண்டிய தொகை = ரூ. 4003 /- ஆகும்.

மேலும் வீட்டு பொருட்கள் வாங்குவதற்கு வருடத்திற்கு 30000 தரக்கூடிய Debt Fund, 1 வருட முதலீட்டீற்கு பிறகு முதலீடு செய்ய வேண்டிய தொகை = ரூ. 2342/- ஆகும் 

அவசர தேவை, 5 லட்சம், எப்போது வேண்டுமானாலும், Liquidity Fund ல் முதலீடு செய்ய வேண்டிய தொகை = ???

இது Liquid Fund மேலே சேமித்தது போக மீதம் அதிகமாக சேமிக்க வேண்டும்.

ஆக இது போல உங்கள் தேவை என்ன, அதற்கு சரியான Mutual Fund என்ன, மற்றும் அதனை நிறைவேற்றுவதற்கான சரியான முதலீட்டு தொகையை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். 
---

ஒரு செவிலியரின் அடிப்படை வருமானம் = 27000.

வருமானத்தின் 40% சேமிக்க வேண்டும்
27000 X 40 ÷ 100 = 10800

மேலே உள்ளவற்றிற்கு நீங்கள் சேமிக்க வேண்டிய தொகை = 17434

இது முதலீடு, ஒவ்வொரு ரூபாயும் நமக்காக வேலை செய்யப் போகிறது.
---

15 எண்ணிக்கை விதி:-

கடைசியாக ஒன்று. 

15000 ரூபாய், 15 வருடம், மாத மாதம் சேமித்தால் நீங்கள் 15 வருட முடிவில்
கோடீஸ்வரர்.
----

நான் வருமான வரி பற்றி முன்பு எழுதியவற்றில் சில இங்கு நினைவு கூற விரும்புகிறேன்.

செவிலியர்கள் கண்டிப்பாக ஒரு Public Provident Fund கணக்கு துவங்கவும்.

LIC காப்பீடு எடுக்காதவர்கள் கண்டிப்பாக Post Office Life Insurance (PLI) ல் சேரவும்.(LIC வேண்டாம்)

குடும்ப மருத்துவ காப்பீட்டில் குறைந்தது 5 லட்சத்திற்கு Premium செலுத்துங்கள்

காப்பீடு (Insurance) ஒரு முதலீடு அல்ல.

பணம் நமக்காக உழைத்து, பணம் செய்ய வேண்டும்.

நாம் சம்பாதிக்கும் பணத்தை பலர் முதலீடு என்ற பெயரில் தவறான ஆலோசனையின் பேரில் தவறான இடங்களில் முதலீடு செய்கிறோம்.
(போஸ்ட் மாஸ்டருக்கு PLI தான் தெரியும், LIC Agent-க்கு LIC தான் தெரியும்)

தற்போது பங்குகள் விற்பனை குழுமம் முதலீட்டாளர்கள் ஏமாற்றப்படக் கூடாது என்பதற்காக பல்வேறு கண்காணிப்பு முறையை கையாள்கின்றனர்.

எனவே சிந்தித்து செயல்படுவீர் செவிலியர்களே.
---

நான் ஒரு சராசரி மனிதனாக, எனது தேவைகளை பூர்த்தி செய்ய கற்கும் கல்வியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இதை தெரிந்து கொண்டு கடைப்பிடிப்பதும், அல்லது குப்பையில் எரிவதும் உங்கள் விருப்பம்.

மேலும் தகவல் வேண்டும் என்றால் 9894011050 என்ற எண்ணிற்கு, SMS அல்லது WHATSAPP மூலமாக Message மட்டும் செய்யவும், தயவு செய்து CALL செய்யாதீர்கள்.

ஏனெனில் நானும் ஊதியத்திற்காக உழைக்கும் ஒரு செவிலியன், அனைத்து நேரமும் தொலைபேசியிலேயே பேசிக் கொண்டு இருக்க முடியாது.

ம. உமாபதி,
செவிலியர்,
GVMCH - விழுப்புரம்

3 Comments

Previous Post Next Post