பெரும்பாலும் நாம் சமூக வலைதளங்களான FACEBOOK, TWITTER போன்றவற்றை உபயோகப்படுத்துகிறோம்,
சமூக வலைதள தொழில்நுட்பங்களில் நிறை குறைகள் இருந்தாலும் அவற்றின் அதிகபட்ச உபயோகத்தினை நாம் பெற சமூக வலைதளத்தினை முறையாக பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
நமது செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கான உண்ணாவிரதம், போராட்டம் போன்றவற்றின் புகைப்படம் செய்திகள் FACEBOOK ல் வந்த போதும் அவற்றிற்கான சமூக வலைதள அந்தஸ்து கிடைப்பதில்லை.
நாம் ஹேஸ்டேக் ( Hashtag) குறியீடுகளை பய்ன்படுத்துவதில்லை, இவற்றினை பயன்படுத்தும் போது இதே போன்ற குறியீடு உடைய மற்ற நபர்களின் பதிவுகளும், கமண்ட்டுகளும் FACEBOOK இணையதளத்தால் கணக்கில் எடுக்கப்பட்டு, அதிக பகிர்வுகள் வரிசையில் (Trends) காட்டப்படும்.
செவிலியர்கள் ஓர் உலக இனம், ஒரு மூலையில் பாதிக்கப்படும் செவிலியர்களைப்பற்றி மற்றொரு மூலையில் உள்ள செவிலியர்கள் அறிந்து கொள்ள வைக்க வேண்டும்.
எனவே வருகின்ற உண்ணாவிரதம் தொடர்பாக நீங்கள் பகிரும் ஒவ்வொரு புகைப்படம் மற்றும் பதிவுகளில் #REGULARISE_TN_NURSES என Hashtag சேர்த்து பதியுங்கள். Post ஐ தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பகிருங்கள்.
உதாரணமாக:-
தமிழகத்தில் சுமார் 10000 த்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் சமூக பாதுகாப்பு இன்றி, தற்காலிக முறையில்,கொத்தடிமைகளாக பணிபுரிகின்றனர்.
#தமிழக_அரசே_ஒப்பந்த_செவிலியர்களை_பணி_நிரந்தரம்_செய்க.
In Tamil Nadu State there are more than 10000 Nurses in Bonded Labour without social security.
#Regularise_TN_Nurses.
என.
ஒரே வார்த்தையிலான அதிக பகிர்வு உலகினை நம் பக்கம் திருப்பும்.