தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர்களின் ஊதியம் அரசாணை (நிலை) எண்:- 342 நாள்:- 14/12/2012 வழி உயர்த்தி வழங்கப்பட்டது. அந்த அரசாணையில் சில புரிதல்கள் தேவைப்பட்டதால் அது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டம் வழி தகவல்கள் கோரப்பட்டது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் N.R.H.M - TN, DIRECTOR அவர்களிடம் இருந்து பெறட்ட அதிகார பூர்வ தகவல்கள் இங்கு அனைத்து செவிலியர்களின் பயன்பாட்டிற்காக தரப்பட்டுள்ளது
1. பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு காரணங்களால் RCH Scheme இன் கீழ் இரண்டு செவிலியர்(each staff done 12 hours duty) மட்டுமே பணி புரிகின்றனர். அவர்களுக்கு அரசு ஆணை எண் 342 இன் படி, அவர்கள் 01/04/2012 முதல் பார்த்த கூடுதல் பணி நேரத்திற்கு (each staff done 12 hours duty) ரூபாய் 1000 நிலுவை தொகை வழங்க பட வேண்டுமா என்ற தகவல்
தகவல்: அரசாணை வெளியான தேதியில் (14/12/2012) இருந்து வழங்கப் பட வேண்டும்
2. அரசு ஆணை எண் 342 (பிரிவு 4/II) இன் படி 01/04/2012 முதல் ஒவ்வொரு மாதமும் 7 நாட்களுக்கு குறைவாக அவர்கள் பார்த்த கூடுதல் பணி நேரத்திற்கு ஒரு நாளைக்கு ரூபாய் 100 நிலுவை தொகை வழங்க பட வேண்டுமா என்ற தகவல்
தகவல்: அரசாணை வெளியான தேதியில் (14/12/2012) இருந்து வழங்கப் பட வேண்டும்
3. அரசு ஆணை எண் 342 படி மாதம் ரூபாய் 1000 அலவன்ஸ் பெற (additional allowance of Rs. 1000 each per month for taking up 12 hours duty continuously for 7 days to 31 days) பெற 7 முதல் 31 நாள் வரை தொடர்ந்து பணி புரிய வேண்டுமா என்ற தகவல்
தகவல்: ஆம் (வார ஓய்வினை தவிர்த்து)
4. அவ்வாறு அவர்கள் 7 முதல் 31 நாள் வரை தொடர்ந்து பணி புரியும் போது அந்த 7 முதல் 31 நாட்களுக்கு இடையில் வார ஒய்வு அவர்களுக்கு உண்டா என்ற தகவல்
தகவல்: வார ஓய்வு உண்டு
5. அவ்வாறு ஒரு செவிலியருக்கு வார ஒய்வு அளிக்க பட்டால் மற்றொரு செவிலியர் எவ்வளவு நேரம் பணி புரியவேண்டும் என்ற தகவல்
தகவல்: செவிலியர் பணி அத்தியாவசிய பணியாக உள்ளதால் இரு செவிலியர்கள் பணியில் இருக்கும் போது ஒருவருக்கு வார ஓய்வு அளிக்கப்படின், மற்றொருவர் 12 மணி நேரம் பணிபுரியவேண்டும். மேலும் அடுத்த 12 மணி நேரம் ஏதேனும் அவசர தேவை ஏற்படும் போது (உதாரணமாக கர்ப்பிணி பிரசவத்திற்கு வரும் போது) வந்து பணி புரியவேண்டும்.
6. இரண்டு செவிலியர் மட்டுமே பணிபுரியும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், ANM இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஒரு செவிலியர் விடுப்பிலோ அல்லது வார ஓய்விலோ செல்லும் போது மற்றொரு செவிலியர் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டுமா என்ற தகவல்
தகவல்: செவிலியர் பணி அத்தியாவசிய பணியாக உள்ளதால் இரு செவிலியர்கள் பணியில் இருக்கும் போது ஒருவருக்கு வார ஓய்வு அளிக்கப்படின், மற்றொருவர் 12 மணி நேரம் பணிபுரியவேண்டும். மேலும் அடுத்த 12 மணி நேரம் ஏதேனும் அவசர தேவை ஏற்படும் போது (உதாரணமாக கர்ப்பிணி பிரசவத்திற்கு வரும் போது) வந்து பணி புரியவேண்டும்.
7. ஒரு செவிலியர் வார ஓய்வில் இருக்கும் போது மற்றொரு செவிலியர் பணியை முடித்து (after finish 12 hours duty) சென்று CALL DUTY யில் வந்து பிரசவம் பார்த்தால் அவருக்கு அரசு ஆணை எண் 342 படி (பிரிவு 6/III/a) படி ரூபாய் 500 அலவன்ஸ் உண்டா என்ற தகவல்
தகவல்: உண்டு
8. அரசு ஆணை எண் 342 படி பிரிவு 4 உட்பிரிவு III இல் BEYOND THE REGULAR DUTY HOURS என்ற வார்த்தை பயன்படுத்த பட்டுள்ளது. REGULAR DUTY HOURS என்றால் எத்தனை மணி நேரம் என்ற தகவல்
தகவல்:- ஒரு நாளில் மூவர்(SN, ANM) பணியில் இருக்கும் போது ஒவ்வொருவரும் தொடர்ந்து 8 மணி நேரம் பணி புரியவேண்டும்.
இருவர் பணியில் இருக்கும் போது 12 மணி நேரம் தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரியவேண்டும்.
9. மூன்று செவிலியர் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்களில் மற்ற இரண்டு செவிலியர்கள் கண்டிப்பான முறையில் 12 மணி நேரம் பணி புரிய வேண்டுமா என்ற தகவல்
தகவல்: ஆம், செவிலியர் பணி அத்தியாவசிய பணியாக உள்ளதால் 12 மணி நேரம் பணி புரிவது அத்தியாவசியமாகிறது.
10. மூன்று செவிலியர் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு செவிலியர் வார ஓய்வில் உள்ள போது மற்ற இரண்டு செவிலியர் பார்க்கும் 12 மணி நேர பணிக்கு ரூபாய் 100 அலவன்ஸ் உண்டா என்ற தகவல்
தகவல்: ஆம்,
13. தமிழ்நாட்டில் NRHM project இன் கீழ் பணி புரியும் (RCH, MMU, NICU ) தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பொங்கல் போனஸ் உண்டா என்ற தகவல், உண்டு என்றால் அந்த தொகை எவ்வளவு என்ற தகவல், போனஸ் தொகை எந்த நிதி தொகுப்பில் (salary head) இருந்து வழங்க படும் என்ற தகவல்
தகவல்: இத்திட்டம் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி நடைமுறை படுத்த பட்டுள்ளது. செவிலியர் உள்பட இத்திட்டத்தில் பணியாற்றும் தொகுப்புதியம் பெறும் அனைத்து பணியாளர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்கிட நிதி ஏதும் பெற படவில்லை.
thank you brother but some districts are not yet give this arrier to our staffs
ReplyDeleteArrears amount will come after allotted funds
ReplyDeleteTHANKS FOR VALUABLE INFORMATION
ReplyDeleteThanks for valuable information again o
ReplyDeletesir,MRB -NCD staff - want to know the duty hours in PHC..
ReplyDeletewhether NCD staff has to do night duty...if so any allowance
Kindly inform me Duty timing of ncd staff nurse
DeletePlease Give detailed gos
ReplyDeleteTell me ncd staff nurse duty hours
ReplyDeletePlease tell me ncd staff nurse duty hours for gh
ReplyDelete