செவிலியர்களே மலாலா சிறுமியின் தீரம் கேளீர்!!!

பாகிஸ்தானில் ஒரு சிறுமி அவளின் 11 வயதில் தாலிபான்களால் பெண் குழந்தைகள் படிக்க கூடாது என்று கூறி பள்ளிகள் மூடப்பட்டது, அன்றே கதறி அழுது அவர்களை தடுத்தவள் இந்த மலாலா என்ற சிறுமி,

 அதோடு  நின்றுவிடாமல் இது தொடர்பாக சமூக வலை தளங்களான பேஸ்புக், வலைப்பூ போன்றவற்றில் எழுதி அங்கு நடைபெறும் அநியாயங்களை உலகம் அறிய செய்தாள். பெண் சிறுமிகளுக்கு கல்வி மறுக்கப்படுவதற்கு எதிராக 11 வயதில் போராட துவங்கினாள் . இதன் விளைவாக அந்த சுமாட் வாலி கிராமத்தில் பாக்கிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து பெண் குழைந்தைகள்  கல்வி கற்க நடவடிக்கை எடுத்தது 

சரி இதற்கும் செவிலியர்களுக்கும் என்ன தொடர்பு என கேட்பது புரிகிறது.

இன்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இது நம் வேலை இல்லை என தெரிந்தும் பெருக்குவது முதல் இரவு காவலர்கள் வரை அனைத்து பணிகளையும் செய்து வருகிறோம். 

இது பற்றி DD இடம் கூறினால் அவர் Deputation போட்டு விடுவார். 
 BMO உன்னை வேலையில் இருந்து டிஸ்மிஸ் பண்ணிவிடுவேன் என கூறுகிறார்.

இதையெல்லாம் விட மேலாக செவிலியர்கள் கூட்டமாக கூடுவது அரசுக்கு எதிரானது அதனால் அவர்கள் மாநில மாநாட்டில் கலந்து கொள்ள கூடாது அவ்வாறு கலந்து கொண்டால் அவர்கள் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்யப்படுவர் என கூறி அவர்களிடம் உறுதிமொழி வாங்கி வைத்து கொள்ள கூறுகிறார் DMS. 

இது போன்ற காகித மிரட்டல்களுக்கு மிரளும் செவிலியர்களே கேளீர்

இதோ இந்த மலாலா பெற்றது என்ன தெரியுமா?

நெற்றியிலும், கழுத்திலும் துப்பாக்கியால் சுட்ட குண்டுகள்,
இன்று உயிருக்கு போராடும் ஒரு நோயாளி இவள்,
இவளின் படிப்பு உரிமை பறிக்கப்பட்டதை எதிர்த்து இவள் போராடும் போது  இவளுக்கு எதிராக நின்றது கொலைக்கும் அஞ்சாத தாலிபான்கள்.



இங்கு நமது உழைப்பு சுரண்டப்படுகிறது, 2 வருட ஒப்பந்த அடிப்படை  என்று கூறி 4 வருடங்களுக்கு மேல் ஆகியும் பணி நிரந்தரம் இல்லை, நம்மை நம்பி உள்ள குடும்பத்தை காப்பாற்ற இயலவில்லை. ஆனாலும் நாம் வாய் திறவாமல் அமைதி காக்கிறோம்.

நவம்பர் - 10 மலாலா தினம்,

உலக நாடுகளை அனைத்து குலைந்தகளும் 2015 ற்குள் கல்வி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வற்புறுத்துகிறது.

நாம் ?.......

1 Comments

  1. தனது தேவைக்காக போராடும் போராட்டகுணங்கள் தனக்கு இடம் கிடைத்தால் போதும் மனப்பாங்கு கொண்டவர்களும்,பயந்தவனும் ,பலவீனமானவனும் ,படிக்காதவனும் இருக்கும் பட்சத்தில் மற்றவர்களின் பார்வையில் நீங்கள் சொல்வதைப் பைத்தியக்காரத்தனமாக பார்க்கிறது இந்த உலகம்.

    எந்த பிரச்சனையும் இல்லாமல் சுலபமாக உங்கள் பயணம் செல்கிறது என்றால் நீங்கள் ஏதோ ஒரு தவறான வழியில் பயணிப்பதாக அர்த்தம்-யாரோ சொன்னது.

    ReplyDelete
Previous Post Next Post