வீழ்வேன் என்று நினைத்தாயோ?

தேடிச் சோறு நிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்ப மிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து

நான் நரை கூடிக், கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக்கு இரை என
பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போல

நானும் இங்கு
வீழ்வேன் என்று நினைத்தாயோ?

பேடி மனிதன்கள் பல கூடி
அவர் கேடி தன்மை நீ செய்தால்,
கூடும் கூட்டம் குலையும் என
நினைத்தாயோ

இல்லை எம் கூட்டம்
அஞ்சி நடுங்கி
குலை கெஞ்சி விழும் என நினைத்தாயோ 

என்ன செய்யும் இந்த
சின்னஞ் சிறு கூட்டம்
என நினைத்தாயோ

வாடும் மனம் அல்ல இது
வலிமை குறையும் குளம் அல்ல இது 
வஞ்சகம் பல வரினும்
எஞ்சி வடிவது அல்ல இது.

சோகம் பல உண்டு இங்கு
வேகம் பல உண்டு இங்கு
இருப்பினும் சோதனைகள் தான்
எந்தன் தோள்களை திடப்படுத்தும்.

வீழ்வேன் என்று நினைத்தாயோ
இல்லை வீழ்த்துவேன் என்று பயந்தயோ
பல வஞ்சக செயல்கள் எங்களின் 
கூட்டத்தை கலைக்க செய்ததது போல்
ஒரே ஒரு செயல்
இந்த நிரந்தரத்திற்கு  செய்து இருந்தால்

6000 செவிலியர்களில் 1000 பேருக்காவது
நிரந்தரம் கிடைத்து இருக்கும்

என்றும் அன்புடன் உமாபதி
Tamilnadu Nurse



தமிழக சுகாதாரத்துறையில்
உறங்கிக் கிடக்கும்
ஓர் உலக சமுதாயத்தை
உயிர்த்தெழச் செய்யும்
முதல் முயற்சி TNNurse.org.

Post a Comment

Previous Post Next Post