சங்கம் மீண்டும் சாதித்தது

தமிழ்நாடு அரசு சுகதரத் துறையில் செவிலியர்களுக்கென  உள்ள சங்கம் பல்வேறு செவிலியர் விரோத நடவடிக்கைகளில் சாதித்து வருகிறது.

செவிலியர்களுக்கு ஆறாவது ஊதியக்குழுவில் பெற்று தரவேண்டிய தர ஊதிய நிகர  அடிப்படை ஊதியமான ரூ .10610/-  ஐ பெற்று தராமல் தன்னை அரசுக்கு என அமைக்கப்பட்ட சங்கமாக செயல்பட்டு "இஷ்டம் இருந்தால் வேலை செய் இல்லைனா  எழுதி கொடுத்துட்டு வெளிய  போ" என வீர வசனம் பேசி ஒரு மாபெரும் பேரணியை பொய்க்கச்  செய்தது முதல் சாதனை.

செவிலியர்களில் 10 வருடம் முடித்தாலும் செவிலியர் அவர் 20 வருடம்  முடித்தாலும் செவிலியர் 30 வருடம் முடித்தாலும் செவிலியர் ஆக தான் பணி புரிந்து வருகின்றனர். பணி வருடத்திற்கு தகுந்த பதவி உயர்வு என்பது கனவாகவே உள்ளது செவிலியர்க்கு. (ஒரு இளநிலை உதவியாளர் [கிளார்க்] உடனடியாக உதவியாளர் பணியை பதவி உயர்வாக பெறும்போது செவிலியர்களுக்கு இதுபோல் இல்லாதது சாபக்கேடு)

30 வருடங்களுக்கு பிறகு கிடைத்த செவிலிய கண்காணிப்பாளர் நிலை - 3 பதவியையும் அரசுக்கு ஒப்படைத்து  செவிலியர்களுக்கு மேலும் துரோகம் இழைத்துள்ளது

ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்க கோரி சங்கத்திடம் முறையீடு 2009 ஆம் ஆண்டு முதல் ஒப்பந்த அடிப்படை செவிலியர்கள் செய்து வருகின்றனர்.

ஒப்பந்த அடிப்படை செவிலியர்கள் சங்கத்தில் இல்லை அவர்களுக்காக சங்கம் அரசுக்கு முறையீடு செய்ய முடியாது என கூறியது.

அரசு செவிலியர் பணி அரசு பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பெற்று.  பல்வேறு வழக்குகளில் வெற்றி பெற்று பணி நியமனம் பெற்று வந்த நிலையில் தனியாரில் பயிற்சி பெற்ற செவிலியர்களுக்கும் பணி  வழங்கலாம் என அரசாணை வர வழி விட்டு அடுத்த செவிலியர் மாணவ துரோக செயல் செய்தது சங்கம்.

தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என செவிலியர் மாணவர்களும், பயிற்சி பெற்ற செவிலியர்களும் போராட்டம் செய்த போது  "ரோமபுரி பற்றி எரியும் பொது சங்கம் பிடில் வசித்துக் கொண்டு இருந்தது"

இப்படி பல்வேறு துரோக செவிலியர் விரோத நடவடிக்களை எதிர்த்து சங்க உறுப்பினர்கள் சங்க தேர்தல் வைக்க கோரிய பொது அதிரடியாக அரசியல் செய்து 7 செவிலியர்களை பணி இடை நீக்கம் செய்ய அரசு அதிகாரிகளை வற்புறுத்தி இடைநீக்கம் செய்து சாதனை செய்தது சங்கம்.

மேலும் அரசு ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் பெற்று வழங்க கோரி 2012 ஜனவரி மாதத்தில் சங்கத்திற்கு 6000  ஒப்பந்த அடிப்படை செவிலியர்களும் கடிதம் எழுதி கோரிக்கை வைத்தனர்.

மேலும் அனைத்து ஒப்பந்த அடிப்படை செவிலியர்களும் மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கும், செவிலியர் கனகாணிப்பாளர்களுக்கும் , மூத்த செவிலியர்களுக்கும் ஒப்பந்த அடிப்படை செவிலியர்களின் அவல நிலையையும். துப்புரவு பணியாளருக்கும் கீழான ஊதியத்தையும் பற்றி விளக்க, மாநில சங்க நிர்வாகிகளிடம் தங்களின் குறைகளை எடுத்து கூற கடிதம் எழுதினர்.

இதற்கெல்லாம் முடிவாக 6.06.2012 அன்று செயற்குழு கூட்டிய சங்கம் ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கு நமது சங்கம் எந்தவித கோரிக்கைகளையும் அரசுக்கு வைக்க முடியாது என கூறியது.

இவ்வாறு ஒப்பந்த அடிப்படை செவிலியர்களின் அடிப்படை உரிமைகளுக்கு குரல் கொடுக்காமல் இருந்த சங்கம்.ஒப்பந்த அடிப்படை செவிலியர்கள் தனங்களுக்கு என ஓர் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தமது கோரிக்கைகளை ஜனநாயக முறைப்படி அரசு அனுமதியுடன் "அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் கொண்டு செல்ல முயன்றனர்".

அதனையும் தடுத்து ஒப்பந்த செவிலியர்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர் என அரசு அதிகாரிகளை தூண்டி  செவிலிய சமூகத்திற்கு எதிராக சுமார் 600 செவிலியர்களுக்கு மெமோ வழங்க தூண்டியது சங்கம்.

செவிலியர் விரோத நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிடும் இநத சங்கம் மீண்டும் சாதித்தது.


குறிப்பு:-
அரசியலமைப்பு, உச்சநீதிமன்ற வழக்கெல்லாம் இருந்து என்ன பயன்,
ஒரு சங்கம் அரம்பிய்ங்கப்பா, அது சொல்றத அதிகாரிகள் அனைவரும் கேப்பாங்க.


Tamilnadu Nurse



தமிழக சுகாதாரத்துறையில்
உறங்கிக் கிடக்கும்
ஓர் உலக சமுதாயத்தை
உயிர்த்தெழச் செய்யும்
முதல் முயற்சி TNNurse.org.

3 Comments

  1. விதியை மாற்ற முயற்சிக்கும்போது எல்லாம் பல சதிகள் நம்மை சுற்றி வளைக்கிறது..... என்ன செய்வது..... ஊசி போடும் ஊமை பெண்கள் இருக்கும் வரை..... அவல நிலை மாறாது.....

    ReplyDelete
Previous Post Next Post