விஜயா குழும செவிலியர்கள் குறைந்த பட்சம் ரு.15000 அடிப்படை ஊதியமாக வழங்க வேண்டும், அடிப்படை ஊதியத்தில் 15 விழுக்காடு ஊதிய உயர்வு ஆண்டு தோறும் வழங்க வேண்டும். பணியில் சேர்ந்த உடன் சரிபர்ப்புக்கு பின்னர் செவிலியர்களின் படிப்பு சான்றிதழ்களை வழங்க வேண்டும், ரிஸ்க் படியை உயர்த்த வேண்டும், விடுதி கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கைகளை நிர்வாகத்திடம் கோரி வருகின்றனர்.
இது தொடர்பான கோரிக்கை மனுவை 20 நாட்களுக்கு முன்னரே நிர்வாகத்திடம் முறையாக அளித்துள்ளனர்.
ஆனால் வழக்கமான அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகள் செவிலியர்களின் மீது ஏவி விடப்பட்டு உள்ளன.
செவிலியர்களை மிரட்டியும் பழிவாங்கும் நோக்கத்தோடு சங்க நிர்வாகி பேபி சபீனாவை பணி நீக்கம் செய்தும் உள்ளனர்.
எனவே இது போன்ற அடக்கு முறைகளை எதிர்த்து போராட வேண்டிய கட்டாய சூழலில் உள்ள செவிலியர்கள் 28.05.2012 அன்று காலை 6.00 மணி முதல் வேலை நிறுத்தம் செய்ய ஏக மனதாக பொதுக்குழுவில் தீர்மானம் இயற்றப்பட்டது.
தமிழக அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு உடனடி தீர்வு காணவேண்டும் என தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர் தலைவர் டாக்டர் ஜி. ஆர். இரவீந்திரநாத் அவர்கள் செய்திக் குறிப்பு வெளியிட்டு உள்ளார்.