உயிர் மருத்துவ கழிவுகள் மேலாண்மை

உயிர் மருத்துவ கழிவு என்றால் என்ன?
மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு  சிகிச்சை அளிக்கும் போது உருவாகும் கழிவுகளே உயிர் மருத்துவ கழிவுகள் எனப்படும்.

எவ்வளவு அளவு உயிர் மருத்துவ கழிவுகள் உருவாகும்?
10 - 20 %  உயிர் மருத்துவ கழிவுகள் மருத்துவமனைகளில் உருவாகிறது
(1 கி/நோயாளி/நாள் என தோரயமாக கணக்கிடப்படுகிறது)

உயிர் மருத்துவ கழிவுகளை ஏன் பராமரிக்க வேண்டும்? 
உயிர் மருத்துவ கழிவுகளால் பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு  காயமும், தோற்று நோயும் ஏற்படலாம் எனவே உயிர் மருத்துவ கழிவுகளை முறையாக பராமரிக்க வேண்டும்.

உயிர் மருத்துவ கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
பணியாளர்கள் உயிர் மருத்துவ கழிவுகளை கையாளும் போது ஊசி மற்றும் கண்ணாடிகளை கைகளில் குத்திக் கொள்ள வாய்ப்புகள் அதிகம், இதனால் HIV கிருமி 0 .1 % மும் HEPATITIS B 30 % மும் HEPATITIS C 1 .8 % மும் பரவ வாய்ப்பு உள்ளது.

பல நாட்களாக சேகரம் ஆகி இருக்கும் உயிர் மருத்துவ கழிவுகளால் மருத்துவமனையில் உள்ள அனைவருக்கும்  தொற்று நோய் ஏற்படலாம்.

உயிர் மருத்துவ கழிவுகளை எவ்வாறு முறையாக பராமரிக்க வேண்டும்?
உயிர் மருத்துவ கழிவுகளை வண்ணமிடப்பட்ட குப்பை கூடைகளில் தோற்று நீக்கம் செய்து பின்னர் சேகரிக்க வேண்டும்.

ஏன் வண்ணமிடப்பட்ட குப்பை கூடைகளில் உயிர் மருத்துவ கழிவுகளை சேகரிக்க வேண்டும்?
வண்ணமிடப்பட்ட கூடைகளில் உயிர் மருத்துவ கழிவுகளை சேகரிப்பதால் எந்த கூடையில் என்ன உயிர் மருத்துவ கழிவுகளை சேகரிக்க வேண்டும் என்பதை எளிதில் அனைத்து பணியாளரும் அறியலாம்.

என்ன என்ன வண்ண கூடைகளில் உயிர் மருத்துவ கழிவுகளை சேகரிக்க வேண்டும்?
சிவப்பு, மஞ்சள், நீலம், மற்றும் கருப்பு கூடைகளில்  தொற்று நீக்கம் செய்த உயிர் மருத்துவ கழிவுகளை சேகரிக்க வேண்டும்.

தொற்று நீக்கம் என்றால் என்ன?
உயிர் மருத்துவ கழிவுகளில் உள்ள நோய் பரப்பும் கிருமிகளை அழிக்க பயன்படுத்தும் முறை தொற்று நீக்க முறை எனப்படும்.

என்ன முறையில் மருத்துவமனையில் தொற்று நீக்கம் செய்யப்படுகிறது?
உயிர் மருத்துவ கழிவுகளை மட்டும் 1 % சோடியம் ஹைப்போ குளோரைட் திரவத்தில் 30  நிமிடம் மூழ்க வைத்தால்  நோய் பரப்பும் கிருமிகள் அழிக்கப்படும்.

ஏன் சோடியம் ஹைப்போ குளோரைட் திரவம் பயன்படுத்த வேண்டும்?
சோடியம் ஹைப்போ குளோரைட் திரவம் வைரசுகளை அழிக்கும் திறன் கொண்டது. எனவே உயிர் மருத்துவ கழிவுகளை தொற்று நீக்கம் செய்ய 1 % சோடியம் ஹைப்போ குளோரைட் திரவம் பயன்படுத்தப்படுகிறது.

சிவப்பு கூடைகளில் என்ன உயிர் மருத்துவ கழிவுகளை சேகரிக்க வேண்டும்?
உயிர் மருத்துவ கழிவுகளை சேகரிக்க எண்ணிக்கையிலான சிவப்பு கூடைகளை மருத்துவமனைகளில் பயன்படுத்த வேண்டும்.

அவைகள் 1 . சிவப்பு இரட்டை கூடை 2 . சிவப்பு பெரிய கூடை 3  . சிவப்பு சிறிய கூடை.

சிவப்பு இரட்டை கூடை எதற்கு?
சிவப்பு இரட்டை கூடை தோற்று நீக்கம் செய்ய பயன்படுத்த வேண்டும்.

சிவப்பு இரட்டை கூடையில் பிளாஸ்டிக் ஆல் ஆன( ஊசி குழல்கள், பிளாஸ்டிக் ஐ.வி.குழாய்கள். பிளாஸ்டிக் கேதிட்டர்கள், பிளாஸ்டிக் சிறுநீர் பைகள், பிளாஸ்டிக் ரைல்ஸ் டியுப்ஸ். பிளாஸ்டிக் ஐ. வி பைகள் (பாட்டில்கள் அல்ல),வென்பிலான் பிளாஸ்டிக் பகுதிகள், ஸ்கேல்ப் வெயின் செட் இன் பிளாஸ்டிக் பகுதிகள், நுண்ணுயிரியல் ஆய்வகத்தில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கல்ட்சர் தட்டுகள். பிளாஸ்டிக் ரத்த குழாய்கள்ஆகிய) உயிர் மருத்துவ கழிவுகளை மட்டும் தோற்று நீக்கம் செய்ய 30 நிமிடங்கள் மூழ்க வைக்க வேண்டும்.

(சிவப்பு இரட்டை கூடையில் 1 % சோடியம் ஹைப்போ குளோரைட் திரவம் ஊற்றி வைத்திருக்க வேண்டும். சோடியம் ஹைப்போ குளோரைட் திரவம் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை புதிதாக தயாரித்து சிவப்பு இரட்டை கூடையில் ஊற்றி வைக்க வேண்டும்.)

தொற்று நீக்கம் செய்த பிளாஸ்டிக் உயிர் மருத்துவ கழிவுகளை என்ன செய்ய வேண்டும்?
தோற்று நீக்கம் செய்த உயிர் மருத்துவ பிளாஸ்டிக் கழிவுகளை  சிவப்பு பெரிய கூடையில் சேகரிக்க வேண்டும்.

(கிளவ்ஸ் கள்  மற்றும் மாஸ்க் கள் அதிக சோடியம் ஹைப்போ குளோரைட் திரவத்தை உறிஞ்சுவதாலும், அவற்றை எரிக்கும் போது குளோரின் போன்ற காற்று மாசு படுத்தும் வாயுக்களை வெளிவிடுவதால் கிளவ்ஸ் கள் மற்றும் மாஸ்க் களை தொற்று நீக்கம் செய்வது இல்லை.)

சிவப்பு சிறிய கூடையில் எவ்வகை உயிர் மருத்துவ கழிவுகளை சேகரிக்க வேண்டும்?
சிவப்பு சிறிய கூடையில் ரத்தம் தோய்ந்த பஞ்சு, ரத்தம் தோய்ந்த கட்டு கட்டும் துணி, ஒட்ட பயன்படும் பிளஸ்டர், மாஸ்க் மற்றும் கையுறைகளை சேகரிக்க வேண்டும்.

மஞ்சள் கூடைகளில் என்ன உயிர் மருத்துவ கழிவுகளை சேகரிக்க வேண்டும்?
மஞ்சள் கூடையில் வெட்டி எடுக்கப்பட்ட மனித உறுப்புகள், மகப்பேறின் போது பிரியும் நஞ்சு கொடி போன்ற உயிர் மருத்துவ கழிவுகளை சேகரிக்க வேண்டும்.

நீல வண்ண கூடைகளில் என்ன உயிர் மருத்துவ கழிவுகளை சேகரிக்க வேண்டும்?
உயிர் மருத்துவ கழிவுகளை சேகரிக்க 2  எண்ணிக்கையிலான நீல வண்ண கூடைகளை மருத்துவமனைகளில் பயன்படுத்த வேண்டும்.

1 . நீல வண்ண இரட்டை கூடை 2 . நீல வண்ண சிறிய கூடை.

நீல வண்ண இரட்டை கூடையில் 1 % சோடியம் ஹைப்போ குளோரைட் திரவம் தோற்று நீக்கம் செய்ய ஊற்றி வைக்க வேண்டும்.
கூறிய ஊசிகள், (ஊசி குழல்களின் முனையுடன் வெட்டி எடுக்கப்பட்டு) நீல வண்ண இரட்டை கூடையில் 30 நிமிடம் மூழ்க செய்து தொற்று நீக்கம் செய்ய வேண்டும். வென்பிலான் ஊசிகள், ஸ்கேல்ப் வெயின் செட் இன் ஊசிகள், ஆகியவையும் தொற்று நீக்கம் செய்ய வேண்டும்

நுண்ணுயிரியல் ஆய்வகத்தில் பயன்படுத்தும் உடைந்த கண்ணாடி கல்ச்சர் தட்டுகள், ஆய்வகத்தில் பயன்படுத்தும் உடைந்த கண்ணாடி சிலைடுகள் மற்றும் கண்ணாடி டெஸ்ட் டுயுப்கள்  ஆகியவையும் தொற்று நீக்கம் செய்ய நீல வண்ண இரட்டை கூடையில் 30 நிமிடம் மூழ்க  செய்ய வேண்டும்.  

மேற்குறிய ஊசிகள் மற்றும் உடைந்த கண்ணாடி பொருட்கள் கூறிய பொருட்களின் வகையை சார்ந்தவை.

தொற்று நீக்கம் செய்த  கூறிய பொருட்கள் மற்றும் உடைத்த ஆம்பியுல்கள், வயால்கள் ஆகியவை நீல வண்ண சிறிய கூடையில் சேகரிக்க வேண்டும்.

கருப்பு வண்ண கூடைகளில் என்ன உயிர் மருத்துவ கழிவுகளை சேகரிக்க வேண்டும்?
கருப்பு வண்ண கூடையில் காலவதியான மருந்துகள் மற்றும் வேதிப்பொருட்களை சேகரிக்க வேண்டும்.

சாதாரண கழிவுகள் என்றால் என்ன?
மருத்துவமனைகளில் உருவாகும் உணவு கழிவுகள் மற்றும் சிகிச்சைக்கு பயன்படுத்தாத கழிவுகள் சாதாரண கழிவுகள் எனப்படும்.


மருத்துவமனைகளில் உருவாகும் 80 % கழிவுகள் சாதரண கழிவுகள் ஆகும்.

சாதாரண கழிவுகளை எவ்வாறு சேகரிக்க வேண்டும்?
சாதாரண கழிவுகளை பச்சை நிற குப்பை கூடையில் உயிர் மருத்துவ கழிவுகளுக்கு அப்பால் வைத்து சேகரிக்க வேண்டும். 

சாதாரண கழிவுகள் மருத்துவமனையில் அதிகம் உருவாவதால் உயிர் மருத்துவ கழிவுகளுடன் கலந்தால் அதிக உயிர் மருத்துவ கழிவுகள் சேகரம் ஆகும். இது மேலும் அதைக் தோற்று நோய் மற்றும் காயம் ஏற்பட வாய்ப்பு அளிக்கும்.

சேகரித்த கழிவுகளை என்ன செய்ய வேண்டும்?
வார்டு பகுதிகளில் சேகரமான உயிர் மருத்துவ கழிவுகள் பையின் வினை நன்கு கட்டி வார்டு பகுதியின் பெயர், கழிவின் எடை மற்றும் நாள் பொறுப்பு செவிலியர் (அ) பணியாளரின் கையொப்பத்துடன் உயிர் மருத்துவ கழிவுகள் சேகரிக்கும் அறைக்கு தள்ளு வண்டி மூலம் அனுப்பி வைக்க வேண்டும். 

உயிர் மருத்துவ கழிவுகளுக்கு உரிய பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்.

என்ன என்ன பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்?
உயிர் மருத்துவ கழிவுகளுக்காக


1 . மருத்துவமனை வாரியான கழிவுகளை சேகரிக்கும் பதிவேடு (துப்புரவு பணியாளர் பராமரிப்பது)
2 . வார்டு வரியாக கழிவுகளை சேகரிக்கும் பதிவேடு 
3 . மாத தொகுக்கப்பட்டஉயிர் மருத்துவ கழிவுகளை சேகரிக்கும் பதிவேடு 
4 . ஊசி குத்திய காய பதிவேடு 
ஆகியவை பராமரிக்கப்பட வேண்டும்.


உயிர் மருத்துவ கழிவுகள் மேலாண்மைக்கு என்ன விதி உள்ளது?
சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டம் 1998 ன் படி உயிர் மருத்துவ கழிவுகளை பராமரிக்க சட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிர் மருத்துவ கழிவுகளை சரியாக பராமரிக்காமல் இருப்பதை சட்டத்தை மீறிய குற்றமாகும்.
Tamilnadu Nurse



தமிழக சுகாதாரத்துறையில்
உறங்கிக் கிடக்கும்
ஓர் உலக சமுதாயத்தை
உயிர்த்தெழச் செய்யும்
முதல் முயற்சி TNNurse.org.

1 Comments

Previous Post Next Post