அனைத்து செவிலியர்களுக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்

சர்வதேச மகளிர் தினம்:
சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச் 08 ஆம் தேதி) உலகெங்கும் கொண்டாடப்படுகிறது,
உழைக்கும் பெண்களின் உரிமைகளை காக்கவும்,
ஓட்டுரிமை கேட்டும்,
உழைப்பிற்கு தகுந்த ஊதியம் கேட்டும்
--- நடத்தப்பட்ட ஒரு போராட்டமே இன்று சர்வதேச அளவில் மகளிர் தினமாக கொண்டாட வழி வகுத்தது என்றால் அது மிகை ஆகாது

International Women,s Day Logo:


பெண்களின் உரிமைகள்:
பெண்களின் நிலை கடந்த காலங்களில் மிகவும் பின்தங்கி இருந்து வந்தது, ஆண் பெண் ஏற்ற இறக்கம், ஆணுக்கு பெண் சமம் இல்லா நிலை நீடித்து, பெண்களை அடிமையாகவும், வீட்டிற்குள்ளும் பூட்டி வைத்து இருந்தனர் இந்த நிலை பெண்களின் குரலினை உயர்த்தி அவர்களின் உரிமைகளை கேட்க வைத்தது

முதல் போராட்டம்:
1908 ஆம் ஆண்டு 15000 மகளிர்
“குறைந்த வேலை நேரம், தகுந்த ஊதியம், ஓட்டுரிமை” கேட்டு நியூயார்க் நகரினை முற்றுகை இட்டு போராட்டம் செய்தனர், இது அனைத்து பெண்ணினத்தையும் எழுச்சியுறச் செய்தது

முதல் மகளிர் தின கோரிக்கை:
1910 ஆம் ஆண்டு நாடு முழுவதும் ஒரே நாளில் பெண்களுக்கான ஒரு தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது, அதன் விளைவாக 17 நாடுகளை சேர்ந்த சுமார் 100 பெண்கள் ஒரு அணியாக திரண்டு சர்வதேச மகளிர் தின கோரிக்கை வைத்தனர்

அந்த கோரிக்கைகளை தொடர்ந்தது பின்னிஷ் பாராளுமன்றத்தில் சர்வதேச மகளிர் தினம் என்று ஒரு நாளை அனுசரிக்க சட்டம் இயற்றப்பட்டது

முதல் சர்வதேச மகளிர் தினம் (மார்ச்-19 ,1911):
அதனை தொடர்ந்து முதல் மகளிர் தினம் மார்ச்-19 ,1911 ஆம் ஆண்டு ஆஸ்திரிய, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது

அந்த முதல் மகளிர் தினத்தில் பல்லாயிரக்கணக்கான பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டு பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளுக்கும் தீமைகளுக்கும் எதிராக குரல் கொடுத்தனர்,

தொழிற்சாலை விபத்து:
அதே ஆண்டு(1911) ட்ரைஆங்கில் ஆடை தொழிற்சாலையில்(Triangle Shirtwaist Factory ) ஏற்பட்ட தீ விபத்தில் 146 பெண்கள் உயிர் இழந்தனர், இந்த பெண்கள் அனைவரும் அந்த தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் ஆவர், இந்த துக்ககரமான செய்தி பெண்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் மீட்டு எடுக்க வேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளியது,

Triangle Shirtwaist Factory Fire:

கவிதையின் தாக்கம்
இதன் பாதிப்பினால் எழுதப்பட்ட ஒரு கவிதை (Bread and Roses):ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களின் அவல நிலையையும், அங்கு ஏற்படும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்பங்களையும் விளக்கி வேதனையுறச் செய்தது
இந்த கவிதை நியூயார்க் பெண்களினை தங்களின் உரிமைகளுக்குகாக போராடவும், கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுக்கவும் தைரியம் தரச் செய்தது

அதிகார மகளிர் தினம்:
முதல் உலக போர் சமயத்தில் ரஷ்ய பெண்கள் சர்வதேச முதல் மகளிர் தினத்தை பிப்ரவரி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையில் கொண்டாடினர் அதில் எடுக்கப்பட்ட தீர்மானப்படி உலக நாடுகள் முழுவதும் மார்ச் 08 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப் படுகிறது

நூற்றாண்டு சர்வதேச மகளிர் தினம் (1911-2011 ):
2011 ஆம் ஆண்டு  நூற்றாண்டு சர்வதேச மகளிர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்பட்டது.
1911 ஆம் ஆண்டு தொடங்கிய பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள், பெண்களின் வாழ்வாதார உரிமை மீட்டு  மற்றும் கொடுமைகளுக்கு எதிராக குரல் தரும் ஒரு நாளாக உருவெடுத்து உள்ளது,

அந்த நாள் இப்போது நூற்றாண்டுகள் கடந்தது மகளிரின் உரிமைகளுக்காக இன்னமும போராடி வருகிறது

இன்னமும் போராட்டம்:
நூற்றாண்டுகள் கடந்த போதும் பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் ஈடேறிய வண்ணமே உள்ளன,
பணிபுரியும் இடத்தில் பாலியல் கொடுமை,
பெண்தானே என்ற இளக்காரம்,
ஆண் அதிகார வர்கத்தின் அடக்குமுறை,
அதிக பணி சுமை,
போன்ற எண்ணற்ற துன்புறுத்தல்கள்

இவற்றை எல்லாம் தாண்டி, சோதனை அடிகளை எல்லாம் சாதனை படிக்கற்களாய் மாற்றி மகளிர் புரியும் அறிய செயல்களை சொல்லி மாளாது,

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று கூறிய வாய்கள் இப்போது ஆகாயம் பார்த்து வாய் பிளந்து மடிந்து போன கதை உண்டு!
பெண்கள் விமானம் ஓட்டும் பைலட்டுகளாய் மாறியதால்

உறுதி ஏற்போம்:
இந்த நூற்றாண்டு சர்வதேச மகளிர் தினத்தில்,
பெண்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும்,
அவர்களின் அறிய செயல்கள் போற்றப்பட வேண்டும்,
கொடுமைகளுக்கு எதிரான சட்டங்கள் வலுப்பட வேண்டும்,
 என உறுதி எடுப்போம்

சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்:

அனைத்து செவிலியர்களுக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்

Post a Comment

Previous Post Next Post