தற்செயல் விடுப்பு

ஒர் ஆண்டுக்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும்.

தற்செயல் விடுப்பை அரசு விடுமுறைகள், ஈடுசெய் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தும் எடுக்கலாம், ஆனால் ஒரு நேரத்தில் எடுக்கப்படும் மொத்த விடுப்பு பத்து நாட்களுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும்
( அடிப்படை விதியின் இணைப்பு VII )

எதிர்பாராதவிதமாக 11வது 12வது நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்க பட்டால் பத்து நாட்களுக்கு மேலும் விடுப்பு அனுபவிக்கலாம்
( அ. ஆ எண் 309, நாள் 16-8-1993)

முன்னரே ஒப்புதல் பெரும் தற்செயல் விடுப்புக்கான விண்ணப்பத்தில், விடுப்பிற்கான காரணம் குறிப்பிடத் தேவை இல்லை
(அ. ஆ எண் 1410, நாள் 16-8-1993)

தற்காலிக பணியாளர்கள் மற்றும் தகுதிகாண் பருவத்தினருக்கு இரண்டு மாதங்களுக்கு மூன்று நாட்கள் என்ற அளவில் ( மொத்தத்தில் 12 நாட்களுக்கு அதிகமாகாமல் ) இவ்விடுப்பு வழங்கப்படும்

கணக்கில் தற்செயல் விடுப்பு இல்லாதவருக்கு முன் அனுமதியுடன் ஈட்டிய விடுப்பு வழங்கப்படும் (அடிப்படை விதி 67 ன் துணை விதி 3)

நான்கு நாட்களுக்கு மேல் விடுப்பு எடுத்தால் ஒரு வார ஓய்வும், எட்டு நாட்களுக்கு மேல் விடுப்பு எடுத்தால் இரண்டு வார ஓய்வும் கழிக்கப்படும்



நன்றி

1 Comments

  1. அன்புடைய பதிவருக்கு வணக்கம்,

    தங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் ! மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...

    அன்புடன்,

    வலைச்சரம் நிர்வாகம்.
    www.valaicharam.com

    ReplyDelete
Previous Post Next Post