“மனிதவள மேம்பாட்டையும், மக்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்துவது தமிழக அரசின் (Tamilnadu Government) முக்கிய குறிக்கோளாகும்,”
இவை மக்களின் மனநலம், உடல்நலம் பொறுத்தே அமைகிறது, இதற்கு சுகாதார முன்னேற்றம் அடிப்படையாக விளங்குகிறது,
சுகாதார மேம்பாட்டிற்காக மருத்துவம் மற்றும் மருத்துவம் சாரா பணியாளர்களை உருவாக்குவதில் மருத்துவக் கல்வி துறை முக்கிய பங்காற்றுகிறது
மருத்துவ சேவைகள் இயக்ககத்தில் (Directorate of Medical Services) இருந்து மருத்துவ கல்வி இயக்ககம்(Directorate of Medical Education) 1966 ஆண்டு தனிமை படுத்தப்பட்டு கடந்த 44 வருடங்களாக இயங்கி வருகிறது
இதன் கீழ் மருத்துவ கல்லூரிகளும், கற்பித்தல் மருத்துவமனைகளும் இயங்கி வருகின்றன
மருத்துவ கல்வி இயக்குனகரம்(Directorate of Medical Education), கல்லூரிகளிலும்,பிணியாளர் கவனிப்பிலும், கல்வி வளர்ச்சி, பயிற்சி உதவி,மற்றும் ஆராய்ச்சி அடிப்படை அமைக்க பொறுப்பு உடையது
மருத்துவ கல்வி இயக்குனகரகத்தின் பணிகள்
- மருத்துவம், பல் மருத்துவம், செவிலியம் (Nursing), மற்றும் மருத்துவம் சார்ந்த கல்விகளின், கல்வி முறையை கண்காணிப்பது,
- மருத்துவ கல்வி இயக்குனகரத்தின் கீழ் வரும் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகளை கண்காணிப்பது
- தனியார் மருத்துவ,பல் மருத்துவ, செவிலிய, மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளை ஒழுங்கு படுத்துதலும்,
- முதுநிலை பட்ட மற்றும் பட்டய படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்துவது ஆகும்
அரசு போக்குவரத்து கழகத்தால் (Tamilnadu State Transport Corporation) நடத்தப்படும் பெருந்துறை மருத்துவக்கல்லூரியில் மொத்தம் 60 இடங்கள்
அதில் 40 இடங்களுக்கு அனுமதி அளிப்பது மருத்துவ கல்வி இயக்குனகரத்தின் பணி ஆகும்
11 அரசு மருத்துவ கல்லூரிகளும்
02 தனியார் மருத்துவ கல்லூரிகளும்
01 அரசு பல் மருத்துவக்கல்லூரியும்
07 தனியார் பல் மருத்துவக்கல்லூரிகளும்
40 அரசு மருத்துவமனைகளும்
மருத்துவ கல்வி இயக்குனகரத்தின் கீழ் இயங்குகிறது
நன்றி:
மருத்துவ கல்வி இயக்குனகரம்
Tags:
இணையதள சேவைகள்